இலங்கை அதிபர் விக்ரமசிங்கே இன்று டெல்லியில் பிரதமரை சந்தித்து பேசினார். அதில் இரு நாடுகளுக்கு இடையே பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
இலங்கை கடுமையான பொருளாதார நிதி நெருக்கடியில் இருந்த பொழுது இந்தியா தொடர்ந்து பல உதவிகளை செய்து வருகின்றது. இந்நிலையில் பிரதமர் மோடியை சந்திக்க இலங்கை அதிபர் விக்ரம சிங்கே அரசு முறை பயணமாக இந்தியா வந்தடைந்தார். பின்னர் இன்று காலை டெல்லியில் பிரதமரை சந்தித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இதில் இரு நாடுகளுக்கிடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டது. மக்கள் தொடர்பு, விமான சேவை, எரிசக்தி பொருளாதார சீர்திருத்தங்கள், மேலும் நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் இயக்கவும், இலங்கையில் தமிழர்களுக்கு புதிய வீடுகள் கட்டித் தரவும் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. மேலும் இந்தியாவில் யு.பி.ஐ தொழில்நுட்பத்தை இலங்கை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.














