இந்தியா தனது அந்நியச் செலாவணி இருப்பை வேகமாகப் பயன்படுத்தி வருகிறது - பொருளாதார வல்லுநர்கள் கருத்து

September 19, 2022

இந்தியாவின் மத்திய ரிசர்வ் வங்கி, அந்நியச் செலாவணி நிதியை வேகமாகப் பயன்படுத்தி வருவதாக பொருளாதார வல்லுநர்கள் கருத்து கூறி வருகின்றனர். முன்னதாக, கடந்த 2013ஆம் ஆண்டு, பொருளாதார தடுமாற்ற நிலை ஏற்பட்டபோது, இந்தியா, தனது அந்நியச் செலாவணியை வேகமான முறையில் பயன்படுத்தியது. அந்த வருடத்தில், ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில், சுமார் 14 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அந்நியச் செலாவணியை இந்தியா செலவிட்டது. தற்போது, அதனை விடவும் கூடுதலாகப் பயன்படுத்தி வருவதாகச் சொல்லப்படுகிறது. […]

இந்தியாவின் மத்திய ரிசர்வ் வங்கி, அந்நியச் செலாவணி நிதியை வேகமாகப் பயன்படுத்தி வருவதாக பொருளாதார வல்லுநர்கள் கருத்து கூறி வருகின்றனர். முன்னதாக, கடந்த 2013ஆம் ஆண்டு, பொருளாதார தடுமாற்ற நிலை ஏற்பட்டபோது, இந்தியா, தனது அந்நியச் செலாவணியை வேகமான முறையில் பயன்படுத்தியது. அந்த வருடத்தில், ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில், சுமார் 14 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அந்நியச் செலாவணியை இந்தியா செலவிட்டது. தற்போது, அதனை விடவும் கூடுதலாகப் பயன்படுத்தி வருவதாகச் சொல்லப்படுகிறது.

குறிப்பாக, இந்த வருடத்தில், ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதத்திற்குள், சுமார் 38.8 பில்லியன் டாலர்களை அந்நியச் செலாவணி இருப்பு நிதியிலிருந்து இந்தியா செலவிட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, ஜூலை மாதத்தில் மட்டுமே 19 பில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டுள்ளது. இதனால், கடந்த ஏப்ரல் மாதத்தில் 64 பில்லியன் டாலர்களாக இருந்த அந்நியச் செலாவணி இருப்பு, 22 பில்லியன் டாலர்களாக குறைந்துள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 80 புள்ளிகளுக்கும் கீழாக குறைந்ததால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று வணிகர்கள் கூறுகிறார்கள்.

இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு 550 பில்லியன் டாலர்களாக குறைந்துள்ளது. இது கடந்த இரண்டு வருடத்தில் மிகக் குறைந்த அளவிலான இருப்பாகும். பொருளாதார நிதி நெருக்கடி ஏற்படுவதை தவிர்க்க இவ்வாறான நடைமுறை பின்பற்றப்படுவதாக பல பொருளாதார நிபுணர்கள் கருத்து கூறி வருகிறார்கள். குறிப்பாக, சீன நாட்டு நாணயத்தை விட இந்தியா சிறப்பாகச் செயல்பட்டு வருவதாக கருத்து கூறுகிறார்கள்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu