இந்திய ரயில்வேவுடன் பகிரப்படும் பயணிகளின் தனிப்பட்ட தகவல்கள் விரைவில் டிஜிட்டல் பணமாக்கப்படும்

August 19, 2022

இந்திய ரயில்வே சுற்றுலா கழகம் அதன் பயனர் தகவல்கள்களை டிஜிட்டல் பணமாக்குவதற்கான ஆலோசகரை பணியமர்த்த ஏலம் விடுத்துள்ளது. ஏலம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 29, 2022 ஆகும். ஒவ்வொரு ஆண்டும் 4 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகளை விற்பனை செய்து, பயனர்களின் தரவுகளைப் வைத்திருக்கும் இந்திய ரயில்வே தனது டிஜிட்டல் தரவைப் வருவாய் ஈட்டும் நோக்கத்திற்காக பணமாக்க திட்டமிட்டுள்ளது. இந்திய ரயில்வேயின் வாடிக்கையாளர்/விற்பனையாளர் பயன்பாடுகள் மற்றும் இந்திய இரயில்வேயின் உள் பயன்பாடுகள் ஆகியவற்றில் உள்ள தரவுகளைப் பணமாக்க […]

இந்திய ரயில்வே சுற்றுலா கழகம் அதன் பயனர் தகவல்கள்களை டிஜிட்டல் பணமாக்குவதற்கான ஆலோசகரை பணியமர்த்த ஏலம் விடுத்துள்ளது. ஏலம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 29, 2022 ஆகும்.

ஒவ்வொரு ஆண்டும் 4 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகளை விற்பனை செய்து, பயனர்களின் தரவுகளைப் வைத்திருக்கும் இந்திய ரயில்வே தனது டிஜிட்டல் தரவைப் வருவாய் ஈட்டும் நோக்கத்திற்காக பணமாக்க திட்டமிட்டுள்ளது. இந்திய ரயில்வேயின் வாடிக்கையாளர்/விற்பனையாளர் பயன்பாடுகள் மற்றும் இந்திய இரயில்வேயின் உள் பயன்பாடுகள் ஆகியவற்றில் உள்ள தரவுகளைப் பணமாக்க விரும்புகிறது. அதன் மூலம் சுற்றுலா மற்றும் பயணங்கள், ஹோட்டல், நிதியுதவி, உள்கட்டமைப்பு மேம்பாடு, காப்பீட்டுத் துறை, சுகாதாரத் துறை, உற்பத்தித் துறை, கப்பல் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து, துறைமுக டெவலப்பர்கள், கொள்கலன் இயக்கம், சுரங்கம், எரிசக்தி போன்ற தனியார் துறைகளுடன் சேர்ந்து வருவாய் ஈட்டுவதற்கும் இது பயன்படும். மேலும் இதன் மூலம் சேவைகளை எளிதாக்குவதற்கும், மேம்படுத்தவும் முடியும் என கூறுகிறது.
பயணிகளின் தரவுகளில் பெயர், வயது, தொடர்பு எண், மின்னஞ்சல் ஐடி, பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை, பயண வகுப்பு, கட்டண முறை, உள்நுழைவு ஐடி மற்றும் கடவுச்சொல் மற்றும் பல போன்ற தகவல்கள் இருக்கும். நாம் அடிக்கடி பயணிக்கும் நகரங்கள், உங்கள் பயணத்தின் அதிர்வெண், விருப்பமான பயண வகுப்பு, முன்பதிவு முறைகள் போன்ற பயணிகளின் நடத்தை தரவுகளும் இதில் அடங்கும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu