இலவசம் குறித்து கருத்து : கெஜ்ரிவாலுக்கு நிர்மலா சீதாராமன் எதிர்ப்பு

August 12, 2022

''இலவச கல்வி, மருத்துவம் வழங்குவது குறித்த கருத்து தெரிவித்ததின் மூலம், விபரீதமான திருப்பத்தை ஏற்படுத்த புதுடில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முயற்சிக்கிறார்,'' என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். 'தேர்தலின்போது அரசியல் கட்சிகள் இலவச அறிவிப்புகள் வெளியிடுவது நாட்டின் பொருளாதாரத்துக்கு பேரழிவை ஏற்படுத்துகிறது' என, பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் குறிப்பிட்டார்.இலவச அறிவிப்புகள் தொடர்பான வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், புதுடில்லி முதல்வரும் ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், 'இலவச கல்வி, […]

''இலவச கல்வி, மருத்துவம் வழங்குவது குறித்த கருத்து தெரிவித்ததின் மூலம், விபரீதமான திருப்பத்தை ஏற்படுத்த புதுடில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முயற்சிக்கிறார்,'' என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

'தேர்தலின்போது அரசியல் கட்சிகள் இலவச அறிவிப்புகள் வெளியிடுவது நாட்டின் பொருளாதாரத்துக்கு பேரழிவை ஏற்படுத்துகிறது' என, பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் குறிப்பிட்டார்.இலவச அறிவிப்புகள் தொடர்பான வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில், புதுடில்லி முதல்வரும் ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், 'இலவச கல்வி, மருத்துவம் வழங்குவது குறித்தும் விவாதிக்க வேண்டும்' என கருத்து தெரிவித்திருந்தார்.

இது குறித்து பா.ஜ.க, மூத்த தலைவர்களில் ஒருவரான மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று கூறுகையில், நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து இதுவரை எந்த ஒரு அரசும், மக்களுக்கு இலவச கல்வி, மருத்துவம் அளிப்பதை இலவச அறிவிப்பாக அறிவித்ததில்லை . தற்போது இது குறித்தும் விவாதிக்க வேண்டும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதன் மூலம், ஏழை, எளிய மக்களிடையே அவர் அச்சத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்.

மேலும் , இலவச அறிவிப்புகள் பிரச்சினையில் விபரீதமான திருப்பத்தை ஏற்படுத்த அவர் முயற்சிக்கிறார். இந்தப் பிரச்னை தொடர்பாக அனைத்து தரப்பினரும் ஆரோக்கியமான விவாதத்தில் ஈடுபட வேண்டும் என்று அவர் கூறினார்.

 

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu