அமெரிக்காவில் 3,000 பேரைக் கொன்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் ஒசாமா பின்லேடன். பின்னர் 2013ல் அமெரிக்க சிறப்புப் படைகளால் கொல்லப்பட்டார். பிரிட்டனின் இளவரசர் சார்லஸ் வேல்ஸ் நிறுவிய The Prince of Wales's Charitable Fund அறக்கட்டளை ,ஒசாமா பின்லேடனின் குடும்பத்தினரிடம் இருந்து நன்கொடை வாங்கியதாக இங்கிலாந்து ஊடக அறிக்கை செய்தி வெளியிட்டுள்ளது . அதாவது 2013ம் ஆண்டு லண்டனில் இளவரசர் சார்லஸ், ஒசாமா பின்லேடனின் ஒன்றுவிட்ட சகோதரர் பக்கரை சந்தித்து 1 மில்லியன் ஜிபிபியை அறக்கட்டளைக்கு நன்கொடையாக பெற ஒப்புக்கொண்டுள்ளார். அதற்கு அரச குடும்பத்தின் நெருங்கிய ஆலோசகர்கள் பலர் மறுப்பு ௯றியுள்ளனர். அத்துடன் சார்லஸைப் பணத்தைத் திருப்பித் தருமாறு வற்புறுத்தியதாக அறிக்கை கூறுகிறது. இருப்பினும், இந்த நன்கொடையை முழுமனதுடன் ஏற்றுக் கொண்டதாக The Prince of Wales's Charitable Fund (PWCF) உறுதியளித்தது என்று அரச மாளிகையின் செய்தியாளர் ௯றினார்.














