சந்திரயான் 3 திட்டம் இஸ்ரோவுக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்துள்ளது. அத்துடன், சர்வதேச அங்கீகாரம் மற்றும் வாழ்த்துக்களை பெற்று தந்துள்ளது. இந்த நிலையில், நாசாவை சேர்ந்த அறிவியல் நிபுணர்கள், இஸ்ரோவின் தொழில்நுட்பங்களை நாடி வந்ததாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.“சந்திரயான் 3 திட்டத்தில் உருவாக்கப்பட்ட ராக்கெட் மற்றும் விண்கலத்தை பார்வையிட நாசாவின் ஜெட் புரோபல்ஷன் லெபாரட்டரியை சேர்ந்த விஞ்ஞானிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தோம். அதனை ஏற்று இஸ்ரோ தலைமையகத்துக்கு வந்த நாசா பிரதிநிதிகளிடம், சந்திரயான் 3 குறித்த விவரித்தோம். நமது கருவிகள் மற்றும் மலிவு விலையில் உருவாக்கப்பட்ட சாதனங்களை பார்வையிட்ட அவர்கள், இதனை ஏன் அமெரிக்காவுக்கு விற்கக் கூடாது என கேள்வி எழுப்பினர். எனவே, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் இந்தியா பன்மடங்கு உயர்வாக உள்ளது. எனவேதான், இந்த துறை சார்ந்த முன்னோடி திட்டமாக, விண்வெளித் துறை தனியார்மயம் ஆக்கப்பட்டுள்ளது.” - இவ்வாறு, அப்துல் கலாம் அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில், இஸ்ரோ தலைவர் சோம்நாத் மாணவர்களிடையே உரையாற்றினார்.














