உக்ரைனில் நேரடி வகுப்புகள்: கலக்கத்தில் இந்திய மாணவர்கள்

August 19, 2022

உக்ரைனில் உள்ள மருத்துவக் கல்லுாரிகளில் மீண்டும் நேரடி வகுப்புகள் துவங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்திய மருத்துவ மாணவர்கள் கலக்கத்தில் உள்ளனர். கடந்த பிப்ரவரி 20ல், உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்த போர் தற்போதும் நீடித்து வருகிறது. கடந்த மார்ச் மாதத்தில் அங்கு மருத்துவம் படித்து வந்த 20 ஆயிரம் இந்திய மாணவர்களை மத்திய அரசு பத்திரமாக மீட்டு வந்தது. இதற்கிடையே, இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லுாரிகளில் தங்கள் படிப்பை தொடர வாய்ப்பு அளிக்க மாணவர்கள் வலியுறுத்தினர். […]

உக்ரைனில் உள்ள மருத்துவக் கல்லுாரிகளில் மீண்டும் நேரடி வகுப்புகள் துவங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்திய மருத்துவ மாணவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

கடந்த பிப்ரவரி 20ல், உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்த போர் தற்போதும் நீடித்து வருகிறது. கடந்த மார்ச் மாதத்தில் அங்கு மருத்துவம் படித்து வந்த 20 ஆயிரம் இந்திய மாணவர்களை மத்திய அரசு பத்திரமாக மீட்டு வந்தது.

இதற்கிடையே, இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லுாரிகளில் தங்கள் படிப்பை தொடர வாய்ப்பு அளிக்க மாணவர்கள் வலியுறுத்தினர். ஆனால், வெளிநாட்டு பல்கலை கழங்களில் படிக்கும் மாணவர்களுக்கு, இந்தியாவில் உள்ள கல்லுாரிகளில் மருத்துவப் படிப்பை தொடர அனுமதிக்க வாய்ப்பு இல்லை என மத்திய அரசு கூறி வருகிறது
இது குறித்து, உக்ரைனில் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் கூறுகையில், கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக ஆன்லைன் வாயிலாக படித்து வந்தோம். இந்நிலையில், வரும் செப்டம்பரில் இருந்து மீண்டும் நேரடி வகுப்புகள் துவங்க உள்ளதாக உக்ரைன் மருத்துவக் கல்லுாரிகள் அறிவித்துள்ளன. மேலும், அக்டோபரில் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான மருத்துவ தகுதித் தேர்வான 'குரோக் - 1' நேரடியாக நடத்தப்பட உள்ளதாகவும் கூறியுள்ளன.

அங்கு தொடர்ந்து போர் நடந்து வருகிறது. ஆனால், கீவ் உள்ளிட்ட நகரங்களில் அமைதி நிலவுவதால், நேரடி வகுப்புகளிலும், நேரடி தேர்விலும் பங்கேற்கும்படி கல்லுாரிகள் கூறுகின்றன. இதனால், உயிரைப் பணயம் வைத்து மீண்டும் உக்ரைன் செல்வதா என்ற குழப்பம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. பெற்றோரும் அச்சத்தில் உள்ளனர்.

இந்தாண்டு தேர்வு எழுதாவிட்டால், அடுத்த ஆண்டில் எழுத முடியும். ஆனால் ஏற்கனவே வகுப்புகளை இழந்துள்ள நிலையில் மேலும் ஓர் ஆண்டை இழக்க வேண்டுமா என்ற குழப்பமும் உள்ளது என்று அவர்கள் கூறினர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu