தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கைக்கு எந்த புதிய நிதியுதவியையும் வழங்கத் திட்டமிடவில்லை என்று உலக வங்கி வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
இலங்கையில் நிலவும், மருந்து, சமையல் எரிவாயு, மற்றும் குழந்தைகளுக்கான உணவு ,பணம் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறையைப் போக்க, தற்போதுள்ள கடன்களின் கீழ் உள்ள நிதியை மீண்டும் பயன்படுத்துவதாக உலக வங்கி கூறியது. அதாவது ஜூன் மாதம், உலக வங்கியானது தற்போதுள்ள 17 திட்டங்களை மறுசீரமைக்கும் என்றும், சர்வதேச நாணய நிதியத்துடன் நிதிக் கடனைப் பற்றிய பேச்சுவார்த்தைக்குப் பிறகு நிதியுதவி வழங்கும் என்றும் ராஜபக்சே முன்பு கூறியி௫ந்தார். ஆனால் அவர் பொ௫ளாதார நெ௫க்கடியை தவறாக கையாண்டதால் நாட்டின் நிலமை மோசமாகியது. அவ௫க்கு மக்கள் எதிர்ப்பும் அதிகரித்து நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன் விளைவாக, உலக வங்கி குழுவானது இலங்கையின் மோசமான பொருளாதார நிலைமை குறித்து கவலை கொண்டுள்ளது. போதுமான பொருளாதார கொள்கை கட்டமைப்பை நடைமுறைப்படுத்தும் வரை, இலங்கைக்கு புதிய நிதியுதவியை வழங்க உலக வங்கி திட்டமிடவில்லை, என்றும் ௯றியது. மேலும் உலக நிதி அமைப்பு தனது அறிக்கையில் இலங்கை பொருளாதாரத்தை மையமாகக் கொண்ட கட்டமைப்பு சீர்திருத்தங்களை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கூறியது.