பா.ஜ.க கட்சியை வீழ்த்துவதற்கான எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு புதிய பெயர் சூட்டியுள்ளனர்.
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.விற்கு எதிராக பல்வேறு எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைப்பது குறித்து பேசி வருகின்றனர். இதன் முதல் ஆலோசனை கூட்டம் கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்றது, தொடர்ச்சியாக பெங்களூருவில் நேற்று இரண்டாவது கூட்டம் தொடங்கியது.
இக்கூட்டத்தில் பா.ஜ.க.வை தோற்கடிக்க அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் என பல்வேறு கருத்துகள் எழுந்துள்ளது. மேலும் பா.ஜ.க.வை வீழ்த்துவது தொடர்பாகவும், கூட்டணியின் பெயர்,கூட்டணிக்கான தலைமை உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. இந்நிலையில் எதிர்க்கட்சியின் தற்போதைய கூட்டணிக்கு இந்திய தேசிய ஜனநாயக ஒருங்கிணைப்பு கூட்டணி (INDIA) என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த இரண்டு பாராளுமன்ற தேர்தலிலும் பெரும்பான்மை வெற்றி பெற்று வரும் பா.ஜ.க வலிமையாக இருக்கும் என்பதினால் எதிர்க்கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.