எதிர்ப்பை மீறி இலங்கைத் துறைமுகத்திற்கு வரும் சீனக் கப்பல்

August 11, 2022

சீனாவின் ஆராய்ச்சி மற்றும் உளவு கப்பலான யுவான் வாங் 5 போர்க்கப்பல், இலங்கையின் எதிர்ப்பை மீறி அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வரவுள்ளது. சீனாவின் யுவான் வாங் 5 போர்க்கப்பல், சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு எரிபொருள் நிரப்புவதற்காக ஆகஸ்ட் 11ஆம் தேதி வரும் என்று கூறப்பட்டது. அத்துடன் ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை, அந்தத் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் என்றும் சொல்லப்பட்டது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. கண்டனத்திற்கு, சீனா தரப்பில் இருந்து கடுமையான எதிர்ப்பு […]

சீனாவின் ஆராய்ச்சி மற்றும் உளவு கப்பலான யுவான் வாங் 5 போர்க்கப்பல், இலங்கையின் எதிர்ப்பை மீறி அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வரவுள்ளது.

சீனாவின் யுவான் வாங் 5 போர்க்கப்பல், சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு எரிபொருள் நிரப்புவதற்காக ஆகஸ்ட் 11ஆம் தேதி வரும் என்று கூறப்பட்டது. அத்துடன் ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை, அந்தத் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் என்றும் சொல்லப்பட்டது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. கண்டனத்திற்கு, சீனா தரப்பில் இருந்து கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக, "பாதுகாப்பைக் காரணம் காட்டி, இது போன்ற விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதே பல நாடுகளுக்கு நல்லது" என்று சீனா அறிக்கை விட்டிருந்தது. பின்னர், செவ்வாய்க்கிழமை அன்று, இலங்கையின் வெளியுறவு அமைச்சகம், சீனாவின் யுவான் வாங் 5 போர்க்கப்பல் இலங்கைக்கு வருவதைத் தவிர்க்குமாறு சீன அரசிடம் கோரிக்கை வைத்ததாகத் தெரிவித்தது. அதுவரை வேகமாக வந்து கொண்டிருந்த அந்த கப்பல், அன்றைய தினத்தில், அம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து சுமார் 600 நாட்டிகல் மைல் தொலைவில் இருந்தது. அது முதல், தனது வேகத்தைக் குறைத்து, அந்தமான் நிக்கோபார் தீவுகளை நோக்கி திசை மாறிச் சென்ற அந்தக் கப்பல், புதன்கிழமை காலை முதல், மீண்டும் இலங்கையை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது. தற்போது அது அம்பாந்தோட்டை துறைமுகத்தை நெருங்கியுள்ளது. எனவே, இந்தக் கப்பல் இலங்கைக்கு வருவது உறுதி என்று சொல்லப்படுகிறது. சீனாவிடம் இருந்து பெற்ற கடனை திருப்பிச் செலுத்த இயலாததால் இந்தத் துறைமுகம் 99 வருட குத்தகைக்கு சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu