என்டிடிவியின் 29% பங்குகளை ஒப்புதல் இல்லாமல் கையகப்படுத்தியது அதானி குழுமம் -

August 24, 2022

என்டிடிவி செய்தி நிறுவனத்தின் 29.18% பங்குகளை அதானி குழுமம் கையகப்படுத்திள்ளது. பிரனாய் ராய், ராதிகா ஆகியோரின் ஆர்ஆர்பிஆர் ஹோல்டிங் நிறுவனம் என்டிடிவி நிறுவனத்தை நடத்தி வருகிறது. இந்நிலையில் இந்த நிறுவனத்தின் மூன்றில் ஒரு பங்கை மறைமுகமாக உரிமை கொண்டாடும் வகையில் அதானி மீடியா குழுமம் அறிவித்துள்ளது. மேலும் 26% பங்குகளை கைப்பற்ற வெளிப்படையாக கேட்டு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த பங்குகளும் சேர்ந்தால் அதனை குழுமத்திடம் என் டி டிவியின் பெரும்பாலான பங்குகள் இருக்கும். ஆனால், ஒரு நிறுவனத்தின் […]

என்டிடிவி செய்தி நிறுவனத்தின் 29.18% பங்குகளை அதானி குழுமம் கையகப்படுத்திள்ளது.

பிரனாய் ராய், ராதிகா ஆகியோரின் ஆர்ஆர்பிஆர் ஹோல்டிங் நிறுவனம் என்டிடிவி நிறுவனத்தை நடத்தி வருகிறது. இந்நிலையில் இந்த நிறுவனத்தின் மூன்றில் ஒரு பங்கை மறைமுகமாக உரிமை கொண்டாடும் வகையில் அதானி மீடியா குழுமம் அறிவித்துள்ளது.

மேலும் 26% பங்குகளை கைப்பற்ற வெளிப்படையாக கேட்டு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த பங்குகளும் சேர்ந்தால் அதனை குழுமத்திடம் என் டி டிவியின் பெரும்பாலான பங்குகள் இருக்கும். ஆனால், ஒரு நிறுவனத்தின் பங்குகளை பங்குதாரர்களின் விருப்பமின்றி வாங்கும் செயல் 'முறையற்ற கையகப்படுத்துதல்' என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் என் டி டிவி தனது இணையத்தில் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், என்டிடிவி எப்பொழுதுமே அதன் இதழியல் செயல்பாட்டில் சமரசம் செய்ததில்லை. மேலும் இந்த பரிவர்த்தனை எந்த வித ஆலோசனை, தகவல் மற்றும் ஒப்புதல் பெறப்படாமல் செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது.

2009- 2010 ல் என்டிடிவி நிறுவனர்களுடன் செய்துகொண்ட கடன் ஒப்பந்தத்தின் அடிப்படையில் விசிபிஎல் இந்த நோட்டீஸை அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளது. என்டிடிவியின் 29.18 சதவீத பங்குகளை வைத்திருக்கும் ஆர்ஆர்பிஆர்ஹெச் நிறுவனத்திடம் அதன் வசம் உள்ள எல்லா பங்குகளையும் இரண்டு நாட்களுக்குள் விசிபிஎல் நிறுவனத்திடம் மாற்றும்படி கூறப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என் டி டிவியின் ஆண்டு வருமானம் ரூ.230.91 கோடி ஆகும். அதன் நிகர லாபம் ரூ.59.19 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu