ஓபன் 13 டென்னிஸ் தொடரில், ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்றில் பிரான்ஸ் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
பிரான்சின் மார்சே நகரில் நடக்கும் ஓபன் 13 டென்னிஸ் தொடரில், ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்றில் பிரான்சின் பெஞ்சமின் பொன்சி மற்றும் ஹ்யூஜஸ் ஹெர்பர்ட் ஜோடி, பெல்ஜியத்தின் சாண்டர் கில்லி மற்றும் போலந்தின் ஜேன் ஜிலன்ஸ்கி ஜோடியுடன் மோதின.
இந்த ஆட்டத்தில் பிரான்ஸ் ஜோடி 6-3, 6-4 என வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.