கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழைக்குப் பிறகு, அம்மாநிலத்தில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது.
கர்நாடகாவில் இந்த ஆண்டு ஜூலை 19 வரை 4,013 டெங்கு வழக்குகள் பதிவாகியுள்ளன. பெங்களூரில் 2,065 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது மாநிலத்தில் பதிவான மொத்த வழக்குகளில் 51.4 சதவீதமாகும்.
2022 ஆம் ஆண்டில், இதே காலகட்டத்தில், கர்நாடகாவில் 3,403 வழக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டை விட டெங்கு பாதிப்பு 18 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ' மாநிலத்தில் பெய்த கனமழையால் வழக்குகள் அதிகரித்துள்ளன. பெங்களூரு எல்லைக்குள் ஜூன் மாதத்தில் டெங்கு பாதிப்பு எண்ணிக்கை 689 ஆக இருந்தது. ஜூலை நடுப்பகுதி வரை எண்ணிக்கை 825 ஆக உயர்ந்துள்ளது. பெங்களூரு கிழக்கு மற்றும் மகாதேவபுரா மண்டலங்களில் அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் காணப்பட்டன'. இவ்வாறு கூறினர்.