ஆப்ரிக்க நாடுகளில் பரவிய குரங்கம்மை தொற்று, உலகின் பல்வேறு நாடுகளிலும் பரவியுள்ளது. இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுகல், அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா உட்பட 75 நாடுகளில் குரங்கம்மை பரவியுள்ளது. உலகம் முழுவதும் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக உலக சுகாதார அமைப்பு, மருத்துவ அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளது.
உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கும் குரங்கம்மை நோயானது, இந்தியாவிலும் சில பேரிடம் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், குரங்கம்மை நோய் தொடர்பாக மத்திய அரசு வழிகாட்டுதல் குழுவை அமைத்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 4 பேருக்கு குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே மத்திய அரசு ஒரு குழுவை அமைத்து கேரளாவில் பாதிக்கப்பட்டவர்களை ஆராய்வதற்கும், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் அனுப்பியுள்ளது. இந்நிலையில், நோய் பாதிப்பு பரவ தொடங்கியது.
கூடுதல் செயலர் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்தியாவில் குரங்கு அம்மை பரவலை தொடர்ந்து, நோய் கண்டறிதல் வசதிகளை விரிவுபடுத்துதல் மற்றும் நாட்டில் நோய்த்தொற்றுக்கான தடுப்பூசிகளை ஆராய்வதற்காக அரசாங்கத்திற்கு வழிகாட்டுதல்களை வழங்குவதற்காக ஒரு குழுவை மத்திய அரசு உருவாக்கி உள்ளது.
சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால், பார்மா மற்றும் பயோடெக் செயலர் உள்ளிட்டோர் குழுவில் உள்ளனர். குரங்கம்மை நோய் தொற்று குறித்து ஆராய்ந்து வழிகாட்டுதல்களை இந்த குழு வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.