கேரளாவில் மழைக்கான 'ரெட் அலெர்ட்' விடுக்கப்பட்டது

August 2, 2022

கேரளாவில் ஒரு வார இடைவெளிக்கு பிறகு மீண்டும் மழை தீவிரமடைந்துள்ளது. ஒரு வாரமாக மழை சற்று குறைந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை முதல் மழை மீண்டும் தீவிரமடைந்தது. ஆகஸ்ட் 5 வரை பலத்த மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. நேற்று மாநிலத்தின் பல மாவட்டங்களில் அதிதீவிர 'ரெட் அலெர்ட்' விடுக்கப்பட்டது. இந்நிலையில் நாளையும், நாளை மறுநாளும் கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு […]

கேரளாவில் ஒரு வார இடைவெளிக்கு பிறகு மீண்டும் மழை தீவிரமடைந்துள்ளது. ஒரு வாரமாக மழை சற்று குறைந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை முதல் மழை மீண்டும் தீவிரமடைந்தது. ஆகஸ்ட் 5 வரை பலத்த மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. நேற்று மாநிலத்தின் பல மாவட்டங்களில் அதிதீவிர 'ரெட் அலெர்ட்' விடுக்கப்பட்டது.

இந்நிலையில் நாளையும், நாளை மறுநாளும் கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

நேற்று பெய்த பலத்த மழையால் கேரளாவின் பல மாவட்டங்களில் இன்று அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. இடுக்கி மாவட்ட மலையோரப் பகுதிகளில் இரவு 8:00 மணி முதல் காலை 6:00 மணிவரை பயணத்திற்கு தடை விதிக்கப்பட்டது. அனைத்து சாகச சுற்றுலா பயணம், டிரக்கிங், தனியார், சுற்றுலா படகுகள், மீன் பிடித்தல், பாறை உடைத்தல் ஆகியவற்றிற்கு மறு தேதி குறிப்பிடும் வரை தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu