கோர்பேவாக்ஸ் தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல்

கோர்பேவாக்ஸ் தடுப்பூசியை 18-வயதுக்கு மேற்பட்டவர்களும் பூஸ்டர் டோசாக செலுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்தியாவின் பயாலஜிக்கல்-இ நிறுவனம், கொரோனாவுக்கு எதிராக கோர்பேவாக்ஸ் என்ற தடுப்பூசியை தயாரித்துள்ளது. இந்த தடுப்பூசி 5 முதல் 14 வயது வரையிலானோருக்கு செலுத்தப்படுகிறது. இந்த, கோர்பேவாக்ஸ் தடுப்பூசியை 18-வயதுக்கு மேற்பட்டவர்களும் பூஸ்டர் டோசாக செலுத்திக்கொள்ள டிசிஜிஐ எனப்படும் இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்தது. கோவேக்சின் அல்லது கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்தி 6 மாதங்கள் […]

கோர்பேவாக்ஸ் தடுப்பூசியை 18-வயதுக்கு மேற்பட்டவர்களும் பூஸ்டர் டோசாக செலுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

இந்தியாவின் பயாலஜிக்கல்-இ நிறுவனம், கொரோனாவுக்கு எதிராக கோர்பேவாக்ஸ் என்ற தடுப்பூசியை தயாரித்துள்ளது. இந்த தடுப்பூசி 5 முதல் 14 வயது வரையிலானோருக்கு செலுத்தப்படுகிறது. இந்த, கோர்பேவாக்ஸ் தடுப்பூசியை 18-வயதுக்கு மேற்பட்டவர்களும் பூஸ்டர் டோசாக செலுத்திக்கொள்ள டிசிஜிஐ எனப்படும் இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்தது.
கோவேக்சின் அல்லது கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்தி 6 மாதங்கள் கடந்தவர்கள் பூஸ்டர் டோசாக கோர்பேவாக்ஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டிருந்த அறிக்கையில், கோவாக்சின் அல்லது கோவிஷீல்டு செலுத்தி கொண்ட 18 வயது முதல் 80 வரையிலான நபர்களுக்கு கோர்பேவாக்ஸ் தடுப்பூசி செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டது. அதில் நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோர்பேவாக்ஸ் தடுப்பூசியை செலுத்துவதற்கு, தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழுவும் பரிந்துரை அளித்துள்ளது.
இந்நிலையில், அவசர காலங்களில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோசாக கோர்பேவாக்ஸ் தடுப்பூசியை செலுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu