கோவா மாநிலத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக ஆம் ஆத்மியை தேர்தல் ஆணையம் அறிவித்தது

August 9, 2022

கோவாவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக ஆம் ஆத்மி கட்சியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆம் ஆத்மி கட்சியை தேசிய கட்சியாக கட்சியினர் தெரிவித்திருந்தாலும் தேர்தல் ஆணையத் தரப்பில் தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்படவில்லை. காங்கிரஸ் கோட்டையாக கருதப்பட்ட தலைநகர் டெல்லியில் தொடர்ந்து 2 வது முறையாக ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்துள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேத்தலில் பஞ்சாபிலும் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்துள்ளது. கோவாவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் […]

கோவாவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக ஆம் ஆத்மி கட்சியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

ஆம் ஆத்மி கட்சியை தேசிய கட்சியாக கட்சியினர் தெரிவித்திருந்தாலும் தேர்தல் ஆணையத் தரப்பில் தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்படவில்லை. காங்கிரஸ் கோட்டையாக கருதப்பட்ட தலைநகர் டெல்லியில் தொடர்ந்து 2 வது முறையாக ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்துள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேத்தலில் பஞ்சாபிலும் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்துள்ளது.

கோவாவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றனர். இந்நிலையில் கோவாவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக ஆம் ஆத்மி கட்சியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. டெல்லி, பஞ்சாபை, தொடர்ந்து கோவாவிலும் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறியது ஆம் ஆத்மி கட்சி. இன்னும் ஒரு மாநிலத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்ற நிலை எட்டப்பட்டால் தேசிய கட்சி என்ற நிலையை ஆம் ஆத்மி கட்சி அடைந்துவிடும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu