சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குநராக தமிழக பெண் விஞ்ஞானி கலைச்செல்வி நியமனம்

அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ்ஐஆர்) தலைமை இயக்குநராக தமிழகத்தைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி கலைச்செல்வி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் லித்தியம் அயர்ன் பேட்டரி துறையில் பல பங்களிப்புகளை அளித்துள்ளார். கடந்த ஏப்ரலில், சிஎஸ்ஐஆர் அமைப்பின் தலைமை இயக்குநராக இருந்த சேகர் மாண்டே ஓய்வு பெற்றார். அதன்பின், தலைமைப் பொறுப்பை பயோடெக்னாலஜி துறையின் செயலாளர் ராஜேஷ் கோகலே கவனித்து வந்தார். இந்நிலையில், சிஎஸ்ஐஆர்தலைமை இயக்குநராக கலைச்செல்வி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2 ஆண்டுகள் இந்தப் பதவியில் இருப்பார் என […]

அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ்ஐஆர்) தலைமை இயக்குநராக தமிழகத்தைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி கலைச்செல்வி நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் லித்தியம் அயர்ன் பேட்டரி துறையில் பல பங்களிப்புகளை அளித்துள்ளார். கடந்த ஏப்ரலில், சிஎஸ்ஐஆர் அமைப்பின் தலைமை இயக்குநராக இருந்த சேகர் மாண்டே ஓய்வு பெற்றார். அதன்பின், தலைமைப் பொறுப்பை பயோடெக்னாலஜி துறையின் செயலாளர் ராஜேஷ் கோகலே கவனித்து வந்தார்.
இந்நிலையில், சிஎஸ்ஐஆர்தலைமை இயக்குநராக கலைச்செல்வி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2 ஆண்டுகள் இந்தப் பதவியில் இருப்பார் என மத்தியப் பணியாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி துறையின் செயலாளர் பொறுப்பையும் இவர் கவனிப்பார்.
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த இவர், 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழி கல்வியில் பயின்றுள்ளார். சிஎஸ்ஐஆர் மையத்தில் விஞ்ஞானியாக தனது பணியை தொடங்கிய கலைச்செல்வி, எலக்ட்ரோகெமிக்கல் மின்சார சாதனங்களில் 25 ஆண்டுகளுக்கு மேலாக ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளார். இதுவரை 125-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். 6 காப்புரிமைகளும் பெற்றுள்ளார்.
நாடு முழுவதும் 4,500 விஞ்ஞானிகள் பணியாற்றும் 38 ஆராய்ச்சி மையங்களுக்கு தலைமை தாங்கும் முதல் பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குநராக பதவியேற்ற பெண் விஞ்ஞானி கலைச்செல்வியை வாழ்த்தி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், ‘இந்தியாவின் உயர் அறிவியல் ஆய்வு நிறுவனமான சிஎஸ்ஐஆர்-ன் முதல் பெண் தலைமை இயக்குநர் என்ற சிறப்பை தமிழகத்தைச் சேர்ந்த கலைச்செல்வி அடைந்திருக்கிறார். அவருக்கு வாழ்த்துக்கள். தமிழ் வழிக்கல்வி, அறிவியலை கற்றுணரத் தடையாகாது என்பதற்கு கலைச்செல்வியின் இந்த சாதனையே சிறந்த சான்று’ என தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தொடர்பான செய்திகள்

மேலும் படிக்க
1 2 3 321

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu