சிங்கப்பூரில் இருந்து கோத்தபய ராஜபக்சே தாய்லாந்திற்குச் செல்கிறார்

August 11, 2022

சிங்கப்பூருக்கு தப்பிச்சென்ற முன்னாள் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தற்போது தாய்லாந்திற்கு செல்ல உள்ளதாக தகவல் வந்துள்ளது. இலங்கையின் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு மக்கள் எழுச்சி போராட்டம் ஏற்பட்டது. இதனால், இலங்கையின் அப்போதைய அதிபர் கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு தப்பி சிங்கப்பூரில் தஞ்சமடைந்தார். கோத்தபய ராஜபக்சேவின் சிங்கப்பூர் விசா ஆகஸ்ட் 11ஆம் தேதியுடன் முடிகிறது. அவர் அந்நாட்டில் தங்குவதற்கு 14 நாட்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், விசா அவகாசம் நிறைவடையும் தருவாயில், இலங்கை […]

சிங்கப்பூருக்கு தப்பிச்சென்ற முன்னாள் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தற்போது தாய்லாந்திற்கு செல்ல உள்ளதாக தகவல் வந்துள்ளது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு மக்கள் எழுச்சி போராட்டம் ஏற்பட்டது. இதனால், இலங்கையின் அப்போதைய அதிபர் கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு தப்பி சிங்கப்பூரில் தஞ்சமடைந்தார். கோத்தபய ராஜபக்சேவின் சிங்கப்பூர் விசா ஆகஸ்ட் 11ஆம் தேதியுடன் முடிகிறது. அவர் அந்நாட்டில் தங்குவதற்கு 14 நாட்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், விசா அவகாசம் நிறைவடையும் தருவாயில், இலங்கை அரசு, கோத்தபய ராஜபக்சேவை சிங்கப்பூர் நாட்டிலேயே தங்க வைக்க, சிங்கப்பூர் அரசிடம் கோரிக்கை வைத்தது. ஆனால், அதனை அடுத்து, கோத்தப்பய ராஜபக்சே தாய்லாந்து செல்ல உள்ளதாகத் தகவல் வந்துள்ளது. இதுகுறித்து தாய்லாந்து வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் தாநீ சங்கரத் கூறியதாவது: "ராஜபக்சேவுக்கு தாய்லாந்து வருவதற்கான கடவுச்சீட்டு வழங்குவதில் எங்களுக்கு ஆட்சேபம் எதுவும் இல்லை. அவரது பாஸ்போர்ட் அதிகாரத்தின்படி, எங்கள் நாட்டில் அவர் 90 நாட்கள் வரை தங்க முடியும். அதே வேளையில், அவர் எங்கள் நாட்டின் அரசியல் விவகாரங்களில் தலையிடாமல் இருக்கும் பட்சத்தில், அவர் தாராளமாக 90 நாட்கள் இங்கு தங்குவதற்கு அனுமதிக்கப்படுவார்" என்று கூறியுள்ளார். ஆனால், கோத்தபய ராஜபக்சேவின் பயணம் குறித்த எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu