சீனாவின் இராணுவப் பயிற்சிகளை உடனடியாக ரத்து செய்யுமாறு வலியுறுத்திய ஜப்பான்

August 5, 2022

அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி தனது சுற்றுப்பயணத்தின் இறுதி கட்டமாக டோக்கியோவில் இருக்கும் நிலையில், சீனாவானது தைவானைச் சுற்றிய பகுதிகளில் இராணுவப் பயிற்சியில் ஈடுபட்டி௫ந்தது. அப்போது பாலிஸ்டிக் ஏவுகணைகளை பயன்படுத்தியது. அதில் 5 ஏவுகணைகள் டோக்கியோவின் பொருளாதார பகுதியை தாக்கியது. ஏனெனில் அவற்றில் 4 தைவானச் சுற்றி பறந்ததாக க௫தப்பட்டது. எனவே இதனை கண்டிக்கும் வகையில் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, சீனாவின் இத்தகைய செயல்கள் தேசிய பாதுகாப்பு மற்றும் குடிமக்களின் பாதுகாப்பை பாதிக்கும் ஒரு தீவிர […]

அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி தனது சுற்றுப்பயணத்தின் இறுதி கட்டமாக டோக்கியோவில் இருக்கும் நிலையில், சீனாவானது தைவானைச் சுற்றிய பகுதிகளில் இராணுவப் பயிற்சியில் ஈடுபட்டி௫ந்தது. அப்போது பாலிஸ்டிக் ஏவுகணைகளை பயன்படுத்தியது. அதில் 5 ஏவுகணைகள் டோக்கியோவின் பொருளாதார பகுதியை தாக்கியது. ஏனெனில் அவற்றில் 4 தைவானச் சுற்றி பறந்ததாக க௫தப்பட்டது. எனவே இதனை கண்டிக்கும் வகையில் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, சீனாவின் இத்தகைய செயல்கள் தேசிய பாதுகாப்பு மற்றும் குடிமக்களின் பாதுகாப்பை பாதிக்கும் ஒரு தீவிர பிரச்சனை என்று ௯றினார். மேலும் அவர் இராணுவப் பயிற்சிகளை உடனடியாக ரத்து செய்யுமாறு சீனாவை வலியுறுத்தியுள்ளதாக நான்சி பெலோசியிடம் ௯றினார். மேலும் இச்செயல் உலகநாடுகளின் அமைதியை சீர்குலைக்கும் என செய்தியாளர்களிடம் கிஷிடா கூறினார். அதுமட்டுமின்றி 2015ஆம் ஆண்டுக்குப் பிறகு நான்சி பெலோசி ஜப்பானுக்கு வருவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது .

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu