சுற்றுலா பயணிகளுக்கு ரூ. 13,600 ரொக்கம் பரிசு - தைவான் அரசு

February 27, 2023

தைவான் அரசு சுற்றுலா பயணிகளுக்கு சுமார் 5 லட்சம் பேருக்கு பணம் அல்லது தள்ளுபடி ஊக்கத் தொகையை வழங்கத் திட்டமிட்டுள்ளது. பிரபலமான சுற்றுலாத்தலம் ஒன்று சுற்றுலாப்பயணிகளுக்கு 13 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வெகுமதிகளை வழங்க உள்ளது. இது பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. பொதுவாகவே சுற்றுலா செல்ல வேண்டுமென்றால் நாம் தான் பணம் செலவழிப்போம். ஆனால் சற்று வித்தியாசமாக சுற்றுலா வரும் பயணிகளுக்கு வெகுமதி வழங்கப்பட உள்ளது. சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதமாக தைவான் சுமார் 5 லட்சம் […]

தைவான் அரசு சுற்றுலா பயணிகளுக்கு சுமார் 5 லட்சம் பேருக்கு பணம் அல்லது தள்ளுபடி ஊக்கத் தொகையை வழங்கத் திட்டமிட்டுள்ளது.

பிரபலமான சுற்றுலாத்தலம் ஒன்று சுற்றுலாப்பயணிகளுக்கு 13 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வெகுமதிகளை வழங்க உள்ளது. இது பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. பொதுவாகவே சுற்றுலா செல்ல வேண்டுமென்றால் நாம் தான் பணம் செலவழிப்போம். ஆனால் சற்று வித்தியாசமாக சுற்றுலா வரும் பயணிகளுக்கு வெகுமதி வழங்கப்பட உள்ளது. சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதமாக தைவான் சுமார் 5 லட்சம் பேருக்கு பணம் அல்லது தள்ளுபடி ஊக்கத் தொகையை வழங்கத் திட்டமிட்டுள்ளது.

இந்த வருடம் 60 லட்சம் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்க இலக்கு வைத்துள்ள தைவான், அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த எண்ணிக்கையை இருமடங்காக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, 5 லட்சம் சுற்றுலாப்பயணிக்கு 13 ஆயிரத்து 600 ரூபாய் ரொக்கமும், 90 ஆயிரம் சுற்றுலா குழுக்களுக்கு 54 ஆயிரம் ரூபாயும் தைவான் அரசு வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu