சென்னை - டாக்கா இடையே கூடுதல் விமான சேவை தொடக்கம்

December 16, 2023

பீமன் பங்களாதேஷ் ஏர்லைன்ஸ் விமான நிலையம் டாக்கா - சென்னை இடையே நேரடி விமான சேவை இன்று முதல் தொடங்கியுள்ளது. சென்னையில் இருந்து வங்காளதேச தலைநகரம் டாக்கா ஏர்லைன்ஸ் விமான நிறுவனமும் யுஎஸ் பங்காள விமான நிறுவனமும் இணைந்து தினசரி நேரடி விமான சேவையை இயக்கி வருகின்றன. தற்போது பீமன் பங்களாதேஷ் ஏர்லைன்ஸ் என்ற நிறுவனம் டாக்கா சென்னை இடையே நேரடி விமான சேவையை இன்று முதல் தொடங்கியுள்ளது. இது வாரத்தில் திங்கள்,வியாழன், சனி ஆகிய தினங்களில் […]

பீமன் பங்களாதேஷ் ஏர்லைன்ஸ் விமான நிலையம் டாக்கா - சென்னை இடையே நேரடி விமான சேவை இன்று முதல் தொடங்கியுள்ளது.

சென்னையில் இருந்து வங்காளதேச தலைநகரம் டாக்கா ஏர்லைன்ஸ் விமான நிறுவனமும் யுஎஸ் பங்காள விமான நிறுவனமும் இணைந்து தினசரி நேரடி விமான சேவையை இயக்கி வருகின்றன. தற்போது பீமன் பங்களாதேஷ் ஏர்லைன்ஸ் என்ற நிறுவனம் டாக்கா சென்னை இடையே நேரடி விமான சேவையை இன்று முதல் தொடங்கியுள்ளது. இது வாரத்தில் திங்கள்,வியாழன், சனி ஆகிய தினங்களில் இயக்கப்பட உள்ளன. இவை வாரத்தின் மூன்று நாட்களிலும் பகல் 12 .50 அணிக்கு டாக்காவில் புறப்பட்டு மதியம் 3.50 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறது. மீண்டும் மாலை 4.15 மணிக்கு சென்னை புறப்பட்டு இரவு 7:30 மணிக்கு டாக்கா விமான நிலையத்தை சென்றடைகிறது. தற்போது மூன்று நாட்கள் இயக்கப்படும் இந்த விமான சேவை தினசரி விமானமாக மாற்றப்பட வாய்ப்புள்ளதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu