சென்னை - நாகர்கோவில் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

April 27, 2024

சென்னை சென்ட்ரலில் இருந்து நாகர்கோவில் செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை மே 30ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் வசதிக்காக நாகர்கோவில் - தாம்பரம், சென்னை சென்ட்ரல் - கேரள மாநிலம் கொச்சுவெலி, சென்னை சென்ட்ரல்- நாகர்கோவில் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி நாகர்கோவில் இருந்து தாம்பரம் செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் மே 5ம் தேதியிலிருந்து 26ம் தேதி வரையும், தாம்பரத்திலிருந்து நாகர்கோவில் செல்லும் சிறப்பு ரயில் மே 6ம் […]

சென்னை சென்ட்ரலில் இருந்து நாகர்கோவில் செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை மே 30ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

பயணிகளின் வசதிக்காக நாகர்கோவில் - தாம்பரம், சென்னை சென்ட்ரல் - கேரள மாநிலம் கொச்சுவெலி, சென்னை சென்ட்ரல்- நாகர்கோவில் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி நாகர்கோவில் இருந்து தாம்பரம் செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் மே 5ம் தேதியிலிருந்து 26ம் தேதி வரையும், தாம்பரத்திலிருந்து நாகர்கோவில் செல்லும் சிறப்பு ரயில் மே 6ம் தேதி முதல் 27ஆம் தேதி வரையும் நீட்டிக்கப்படுகிறது. அதைப்போல சென்னை சென்ட்ரலில் இருந்து கொச்சுவேலி செல்லும் சிறப்பு ரயில் மே 1ம் தேதியிலிருந்து 29ஆம் தேதி வரையும், மறுமார்க்கமாக கொச்சிவேலியில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் எக்ஸ்பிரஸ் மே 2ம் தேதியில் இருந்து 30-ம் தேதி வரையும் நீட்டிக்கப்படுகிறது.

நாகர்கோவிலில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் சிறப்பு ரயில் மே 5ம் தேதியிலிருந்து 19ஆம் தேதி வரையும், சென்னை சென்ட்ரலில் இருந்து நாகர்கோவில் செல்லும் சிறப்பு ரயில் மே 6ம் தேதியிலிருந்து 20ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. மேலும் நாகர்கோவில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் சிறப்பு ரயில் 12ஆம் தேதியிலிருந்து 26ம் தேதி வரையும், சென்னை சென்ட்ரலில் இருந்து நாகர்கோவில் செல்லும் சிறப்பு மே 13ம் தேதியிலிருந்து 27 ஆம் தேதி வரையும் நீட்டிக்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu