இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, நிறுவனத்தின் நிகர லாபம் கிட்டத்தட்ட 17% உயர்ந்துள்ளது.
டிசிஎஸ் நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கைப்படி, 2024 ஆம் நிதி ஆண்டின் முதலாம் காலாண்டில், நிறுவனத்தின் நிகர லாபம் 11074 கோடி ஆகும். இது முந்தைய ஆண்டின் 9478 கோடியுடன் ஒப்பிடுகையில் 16.83% உயர்வாகும். அதே வேளையில், நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 59381 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் 59162 கோடி ரூபாயாக பதிவாகியிருந்தது. எனவே, காலாண்டு அடிப்படையில், செயல்பாட்டு வருவாயில் 12.55% உயர்வு பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று வெளியான டிசிஎஸ் நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கை விளைவாக, இன்றைய பங்குச் சந்தையில் டிசிஎஸ் பங்குகள் உயர்ந்து வர்த்தகமாகி வருகின்றன.














