டார்க் ஸ்டோர் எண்ணிக்கை 40% உயர்த்தப்படும் - பிளிங்கிட்

February 13, 2023

ஜொமாட்டோ நிறுவனம் பிளிங்கிட் என்ற பெயரில் துரித வர்த்தக தொழிலை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், அடுத்த ஒரு வருடத்திற்குள், பிளிங்கிட் வர்த்தகத்திற்கான டார்க் ஸ்டோர் எண்ணிக்கை 40% வரை உயர்த்தப்படும் என்று நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அல்பிந்தர் திண்டுஷா தெரிவித்துள்ளார். தற்போதைய நிலையில், 400க்கும் மேற்பட்ட டார்க் ஸ்டோர்கள் பிளிங்கிட் சேமிப்புக் கிடங்குகளாக செயலாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், பிளிங்கிட் நிறுவனத்தின் வருவாய் 301 கோடியாகவும், மொத்த ஆர்டர் மதிப்பு […]

ஜொமாட்டோ நிறுவனம் பிளிங்கிட் என்ற பெயரில் துரித வர்த்தக தொழிலை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், அடுத்த ஒரு வருடத்திற்குள், பிளிங்கிட் வர்த்தகத்திற்கான டார்க் ஸ்டோர் எண்ணிக்கை 40% வரை உயர்த்தப்படும் என்று நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அல்பிந்தர் திண்டுஷா தெரிவித்துள்ளார். தற்போதைய நிலையில், 400க்கும் மேற்பட்ட டார்க் ஸ்டோர்கள் பிளிங்கிட் சேமிப்புக் கிடங்குகளாக செயலாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

கடந்த டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், பிளிங்கிட் நிறுவனத்தின் வருவாய் 301 கோடியாகவும், மொத்த ஆர்டர் மதிப்பு 1749 கோடியாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது காலாண்டு அடிப்படையில் 28% மற்றும் 18% உயர்வாகும். நிறுவனத்தின் நிதி அறிக்கையை வெளியிட்டு பேசிய திண்டுஷா, “ஏற்கனவே உள்ள நகரங்கள் மற்றும் புதிய நகரங்களில் டார்க் ஸ்டோர் அமைப்பதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளதை ஆய்வு செய்து கண்டறிந்துள்ளோம். அதன்படி, அதிக ஆர்டர்கள் கிடைக்கும் பகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, புதிய டார்க் ஸ்டோர்கள் அமைக்கப்படும். இதனால், வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான ஆர்டர் அனுபவம் கிடைக்கும்” என்று நம்புவதாக கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu