டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்

August 3, 2023

டெல்லியில் வரும் 11ம் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22 ஆவது கூட்டம் நடைபெற இருக்கிறது என அதன் தலைவர் அறிவித்துள்ளார். டெல்லியின் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22 வது கூட்டம் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி நடைபெற உள்ளது. இது கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளா மாநிலங்கள் இடையேயான காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக இந்த கூட்டம் நடைபெறும். டெல்லியில் உள்ள மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தில் ஆணையத்தின் தலைவர் எஸ்.கே. ஹெல்தர் தலைமையில் நடைபெற […]

டெல்லியில் வரும் 11ம் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22 ஆவது கூட்டம் நடைபெற இருக்கிறது என அதன் தலைவர் அறிவித்துள்ளார்.

டெல்லியின் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22 வது கூட்டம் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி நடைபெற உள்ளது. இது கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளா மாநிலங்கள் இடையேயான காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக இந்த கூட்டம் நடைபெறும். டெல்லியில் உள்ள மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தில் ஆணையத்தின் தலைவர் எஸ்.கே. ஹெல்தர் தலைமையில் நடைபெற உள்ளது.

இதில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் அளவு, அணையின் நீர்மட்டம், நீர் வெளியேற்றம், நீர் வரத்து மற்றும் பங்கீடுகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளன. மேலும் கர்நாடக அரசின் தரப்பில் மேகேதாட்டு அணை குறித்தும் விவாதிக்கப்பட இருப்பதாக தெரிகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்கு நான்கு மாநிலங்களான கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களின் நீர்வளத்துறை செயலாளர்கள், பொதுப் பணித்துறை பொறியாளர்கள் ஆகியோர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu