தஞ்சையில் பொது விமான சேவை அமைக்க நடவடிக்கை

August 2, 2022

மாநிலங்களவையில் நேற்று நடந்த கூட்டத்தொடரில், திமுகவின் புதிய உறுப்பினரான எஸ்.கல்யாணசுந்தரம், தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் பொதுமக்களுக்கான விமான சேவை கொண்டுவரும் திட்டம் குறித்து அரசிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய விமானப்போக்குவரத்து துறையின் இணை அமைச்சரான வி.கே.சிங் எழுத்து மூலம் பதில் அளித்தார். அதில், மத்திய அரசு கடந்த 2008 இல் பசுமை விமானநிலையங்களுக்கானக் கொள்கையை அமைத்துள்ளது. நாடு முழுவதிலும் பசுமை விமானநிலையங்கள் அமைப்பதற்கான விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, விமானநிலையம் அமைக்க விரும்பும் நிறுவனம் அல்லது மாநில அரசு, […]

மாநிலங்களவையில் நேற்று நடந்த கூட்டத்தொடரில், திமுகவின் புதிய உறுப்பினரான எஸ்.கல்யாணசுந்தரம், தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் பொதுமக்களுக்கான விமான சேவை கொண்டுவரும் திட்டம் குறித்து அரசிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய விமானப்போக்குவரத்து துறையின் இணை அமைச்சரான வி.கே.சிங் எழுத்து மூலம் பதில் அளித்தார்.
அதில், மத்திய அரசு கடந்த 2008 இல் பசுமை விமானநிலையங்களுக்கானக் கொள்கையை அமைத்துள்ளது. நாடு முழுவதிலும் பசுமை விமானநிலையங்கள் அமைப்பதற்கான விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, விமானநிலையம் அமைக்க விரும்பும் நிறுவனம் அல்லது மாநில அரசு, மத்திய விமானப்போக்குவரத்து துறைக்கு திட்ட அறிக்கையை அனுப்ப வேண்டும்.
மேலும், ஒதுக்கப்படும் நிலம் மற்றும் கொள்கை ரீதியான அனுமதி ஆகிய இரண்டு கட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இதன்படி அனுப்பப்படும் விண்ணப்பங்களை மத்திய விமானப் போக்குவரத்து துறை பரிசீலிக்கிறது. தஞ்சாவூரை பொறுத்தமட்டில் இதுவரை எந்த விண்ணப்பங்களும் அரசிடம் வரவில்லை.
தஞ்சாவூரில் இந்திய விமானப்படையின் விமானநிலையம் ஏற்கெனவே அமைந்துள்ளது. இதில், இந்திய விமானநிலைய அதிகார நிறுவனத்திற்கு 26.5 ஏக்கர் சொந்தமான நிலம் உள்ளது. இருப்பினும், இந்த நிலம் பொது விமானநிலையம் அமைக்க போதுமானதாக இல்லை. இது தொடர்பாக, இந்திய ராணுவம் மற்றும் இந்திய விமானநிலைய அதிகார நிறுவனம் ஆகிய இரண்டும் தம் நிலங்களை பறிமாறி புதிய என்க்ளேவ் அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆர்சிஎஸ் திட்டம் மூலம், தஞ்சாவூரில் விமானநிலையம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu