தமிழகத்தின் வடிவேல் கோபால் உட்பட 50 பேருக்கு பத்ம விருதுகள்

March 23, 2023

தமிழகத்தின் வடிவேல் கோபால் உட்பட 50 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. 2023ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பெறுவோர் பட்டியல் கடந்த ஜனவரியில் வெளியிடப்பட்டது. இதன்படி மூன்று பேருக்கு பத்ம விபூஷண், ஒன்பது பேருக்கு பத்ம பூஷண் மற்றும் 91 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டன. மறைந்த பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம், பாம்பு பிடி வீரர்கள் கோபால், மாசி சடையன் உட்பட தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து பேரின் பெயர்கள் பட்டியலில் இடம்பெற்றன. இந்நிலையில், விருது […]

தமிழகத்தின் வடிவேல் கோபால் உட்பட 50 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

2023ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பெறுவோர் பட்டியல் கடந்த ஜனவரியில் வெளியிடப்பட்டது. இதன்படி மூன்று பேருக்கு பத்ம விபூஷண், ஒன்பது பேருக்கு பத்ம பூஷண் மற்றும் 91 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டன. மறைந்த பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம், பாம்பு பிடி வீரர்கள் கோபால், மாசி சடையன் உட்பட தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து பேரின் பெயர்கள் பட்டியலில் இடம்பெற்றன. இந்நிலையில், விருது அறிவிக்கப்பட்டவர்களில் 50 பேருக்கு புதுடில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று முதற்கட்டமாக பத்ம விருதுகளை வழங்கினார்.

புதுடில்லியைச் சேர்ந்த பேராசிரியர் கபில் கபூர், ஆன்மீகத் தலைவர் கம்லேஷ் பட்டேல், பிரபல பின்னணி பாடகி சுமன் கல்யாண்பூர் ஆகியோருக்கு பத்மபூஷண் விருதுகள் வழங்கப்பட்டன. தமிழகத்தைச் சேர்ந்த இருளர் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த பாம்பு பிடி வீரர்களான வடிவேலு, மாசி சடையன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருதை திரவுபதி முர்மு வழங்கினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu