தமிழகத்தில் காலணிகள் மற்றும் தோல் துறை மாநாட்டில் ரூ.2,250 கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தம் 

August 23, 2022

சென்னையில் இன்று நடைபெற்ற காலணிகள் மற்றும் தோல் துறை மாநாட்டில் ரூ.2,250 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. சென்னையில் இன்று காலணிகள் மற்றும் தோல் துறை மாநாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் ரூ.2,250 கோடி முதலீட்டில் 37,450 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் 5 திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் தமிழ்நாடு காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்கை 2022-யை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். தோல் அல்லாத காலணி பொருட்கள் […]

சென்னையில் இன்று நடைபெற்ற காலணிகள் மற்றும் தோல் துறை மாநாட்டில் ரூ.2,250 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

சென்னையில் இன்று காலணிகள் மற்றும் தோல் துறை மாநாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் ரூ.2,250 கோடி முதலீட்டில் 37,450 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் 5 திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் தமிழ்நாடு காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்கை 2022-யை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
தோல் அல்லாத காலணி பொருட்கள் துறையில் முதலீடுகளை ஈர்த்திடவும், வேலைவாய்ப்புகளை பெருமளவில் உருவாக்கிடவும், ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையிலும் இக்கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன், எழிலன் எம்எல்ஏ, தலைமை செயலாளர் இறையன்பு, தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை கூடுதல் தலைமை செயலாளர் கிருஷ்ணன், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் பூஜா குல்கர்ணி, காலணி மேம்பாட்டு மன்றத்தின் தலைவர் ராஜ்குமார் குப்தா, க்ளார்க் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் ஜொனாதன் ராம், தோல் ஏற்றுமதி கழகத்தின் செயல் இயக்குநர் ஆர்.செல்வம் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu