தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி – தேர்தல் சூழ்நிலை சூடுபிடிக்கிறது

2026 தேர்தலை முன்னிட்டு கட்சிகள் பிரசாரத்தைத் தொடங்கியுள்ள நிலையில், பிரதமர் மோடி தமிழகம் வருவதை அரசியல் வட்டாரங்கள் மிக முக்கியமாக பார்க்கின்றன. அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., விஜய் மற்றும் சீமான் கட்சிகள் வலுவான போட்டிக்குத் தயாராகின்றன. பூத் கமிட்டிகளை உறுதிப்படுத்தி அனைத்து கட்சிகளும் பிரசாரத்தைத் தொடங்கிவிட்டன. பா.ஜ.க. தலைமையகம் தமிழகத்தை முக்கியமாகக் கருதி, வெற்றி எண்ணிக்கையைக் கூட்ட திட்டமிட்டுள்ளது. இதற்காக பிரதமர் மோடி 27, 28-ந்தேதிகளில் அரியலூர், பெரம்பலூர், […]

2026 தேர்தலை முன்னிட்டு கட்சிகள் பிரசாரத்தைத் தொடங்கியுள்ள நிலையில், பிரதமர் மோடி தமிழகம் வருவதை அரசியல் வட்டாரங்கள் மிக முக்கியமாக பார்க்கின்றன.

அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., விஜய் மற்றும் சீமான் கட்சிகள் வலுவான போட்டிக்குத் தயாராகின்றன. பூத் கமிட்டிகளை உறுதிப்படுத்தி அனைத்து கட்சிகளும் பிரசாரத்தைத் தொடங்கிவிட்டன. பா.ஜ.க. தலைமையகம் தமிழகத்தை முக்கியமாகக் கருதி, வெற்றி எண்ணிக்கையைக் கூட்ட திட்டமிட்டுள்ளது. இதற்காக பிரதமர் மோடி 27, 28-ந்தேதிகளில் அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார். குறிப்பாக, 27-ந்தேதி நடைபெறும் கங்கைகொண்ட சோழபுரம் ஆடி திருவிழாவில் அவர் பங்கேற்க உள்ளார். இந்த ஆன்மீக நிகழ்வுகள் பா.ஜ.க.-வுக்கு புதிய எழுச்சி தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமித்ஷா கோவையில் வருகை திட்டமிட்டு இருப்பதுடன், பா.ஜ.க. வட்டாரங்களில் தேர்தல் முன்னேற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu