தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் பொன்முடி

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியலை, சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கழக இயக்ககத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பி.இ., பி.டெக்., பி.ஆர்க். படிப்புகளில் சேர 1.69 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். 1.69 லட்சம் மாணவர்களின் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பொறியியல் படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 20ம் தேதி தொடங்கி அக்டோபர் 21 வரை நடைபெறுகிறது. ஆகஸ்ட் 20 முதல் 23ம் […]

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியலை, சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கழக இயக்ககத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பி.இ., பி.டெக்., பி.ஆர்க். படிப்புகளில் சேர 1.69 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். 1.69 லட்சம் மாணவர்களின் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

பொறியியல் படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 20ம் தேதி தொடங்கி அக்டோபர் 21 வரை நடைபெறுகிறது. ஆகஸ்ட் 20 முதல் 23ம் தேதி வரை 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டுப் பிரிவு சிறப்பு பிரிவினருக்கும் ஆகஸ்ட் 25 முதல் அக்டோபர் 21 வரை பொதுப்பிரிவினருக்கும் கலந்தாய்வு நடைபெறவுள்ளது. மேலும், பி.இ. மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டில் 22 ஆயிரம் மாணவர்கள் பயனடைவர்.

தமிழ்நாட்டில் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 1,96,627 இடங்களும், அண்ணா பல்கலையில் 900 இடங்களும் உள்ளன. இந்த ஆண்டு கல்லூரிகளில் சேரும் 9,981 அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தாண்டு 431 பொறியியல் கல்லூரிகள் கலந்தாய்வில் பங்கேற்கவுள்ளன. பி.இ. மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலில் இந்தாண்டு ரேண்டம் எண் வெளியீடு இல்லை. தொழிற்கல்வி படித்த மாணாக்கர்களுக்கு பொறியியல் படிப்பு சேர்க்கையில் 2 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களை பெற்ற மாணவர்கள் பெயர்களை அமைச்சர் வெளியிட்டார். பி.இ. கட்ஆப்-ல் 200க்கு 200 மதிப்பெண் பெற்று தமிழகத்தை சேர்ந்த ரஞ்சிதா முதலிடம் பிடித்துள்ளார். பொறியியல் படிப்புக்கான புதிய பாடத்திட்டங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

பி.இ. தரவரிசை பட்டியலில் பெயர் விடுபட்டிருந்தாலோ குறைகள் இருந்தாலோ TNEA சேவை மையத்தில், 19ம் தேதி வரை பதிவு செய்யலாம் அல்லது 18004250110ஐ அழைக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu