தமிழகத்தில் 2022-2023 ஆம் கல்வி ஆண்டிற்கான துணை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும்.
தமிழகத்தில், 2022 - 2023ம் கல்வி ஆண்டில் மருத்துவம் சார்ந்த பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., உள்ளிட்ட 19 துணை மருத்துவ படிப்புகளில், 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன.
அதேபோல, பெண்களுக்கான செவிலியர் பட்டயப்படிப்பு, மருத்துவம் சார்ந்த பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகள் உள்ளன. இந்த படிப்புகளில் சேர, www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம்.
இதற்கான விண்ணப்ப பதிவு, இம்மாதம், 1ம் தேதி துவங்கியது. இதுவரை, 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கட்டணம் செலுத்தியுள்ளனர்.
விண்ணப்பப் பதிவு மற்றும் ஆவணங்கள் சமர்ப்பிதற்கு, இன்று கடைசி நாள். எனவே, ஆன்லைனில் பதிவு செய்ததுடன், ஆவணங்கள் சமர்ப்பிக்காமலும் கட்டணம் செலுத்தாமலும் இருப்பவர்கள், இன்றுடன் அனைத்தையும் சமர்ப்பிக்க வேண்டும் என மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.