தெற்கு ரயில்வேக்கு ‛ஸ்கோச்' விருது

August 19, 2022

டிக்கெட் தரவு மையத்தை சிறப்பாக செயல்படுத்தி வருவதற்காக தெற்கு ரயில்வேக்கு ‛ஸ்கோச்' விருது வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'ஸ்கோச்' என்ற அமைப்பு, சமூக, பொருளாதார வளர்ச்சி, தொழில்நுட்பம் உள்ளடக்கிய வளர்ச்சி குறித்து ஆய்வு செய்து வருகிறது. பல்வேறு தொழில்நுட்ப பணிகளை பாராட்டி, விருதுகளையும் வழங்கி வருகிறது. தெற்கு ரயில்வேயில் மூன்று மண்டலங்களுக்கான ஒருங்கிணைந்த டிக்கெட் தரவு மையம் சமீபத்தில் மேம்படுத்தப்பட்டது. புதிய தொழில்நுட்ப வசதியோடு, தொலைநோக்கு திட்டங்களை கொண்டு இந்த மையம் […]

டிக்கெட் தரவு மையத்தை சிறப்பாக செயல்படுத்தி வருவதற்காக தெற்கு ரயில்வேக்கு ‛ஸ்கோச்' விருது வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'ஸ்கோச்' என்ற அமைப்பு, சமூக, பொருளாதார வளர்ச்சி, தொழில்நுட்பம் உள்ளடக்கிய வளர்ச்சி குறித்து ஆய்வு செய்து வருகிறது.

பல்வேறு தொழில்நுட்ப பணிகளை பாராட்டி, விருதுகளையும் வழங்கி வருகிறது. தெற்கு ரயில்வேயில் மூன்று மண்டலங்களுக்கான ஒருங்கிணைந்த டிக்கெட் தரவு மையம் சமீபத்தில் மேம்படுத்தப்பட்டது. புதிய தொழில்நுட்ப வசதியோடு, தொலைநோக்கு திட்டங்களை கொண்டு இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. டிக்கெட் முன்பதிவு மையங்கள் மற்றும் 'யூடிஎஸ்' செயலி போன்றவற்றை செயல்படுத்துவதில் இந்த மையத்தின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கிறது. தெற்கு ரயில்வேயின் தொழில்நுட்ப திறனை பாராட்டும் வகையில், 'ஸ்கோச்' விருது வழங்கப்பட்டுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu