தைவான் விவகாரத்தில் அமெரிக்க அதிபரை எச்சரிக்கும் சீன அதிபர் ஜி ஜின்பிங்

July 29, 2022

ஜூலை 29, வாஷிங்டன்: உக்ரைன் - ரஷ்யா போர்காரணமாக, உலக நாடுகளின் கவனம் அந்நாடுகளின் பக்கம் திரும்பியுள்ளது. இதை பயன்படுத்தி கொண்ட சீனா, , தைவானை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. ஆனால், தைவானுக்கு அமெரிக்கா ஆதரவு கொடுக்கிறது . இதற்கிடையில் தைவானுக்கு செல்லவி௫க்கும் அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் தலைவர் நான்சி பெலோசிக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதுமட்டுமின்றி அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தைவான் விவகாரம் தொடர்பாக ஜி […]

ஜூலை 29,

வாஷிங்டன்:
உக்ரைன் - ரஷ்யா போர்காரணமாக, உலக நாடுகளின் கவனம் அந்நாடுகளின் பக்கம் திரும்பியுள்ளது. இதை பயன்படுத்தி கொண்ட சீனா, , தைவானை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. ஆனால், தைவானுக்கு அமெரிக்கா ஆதரவு கொடுக்கிறது . இதற்கிடையில் தைவானுக்கு செல்லவி௫க்கும் அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் தலைவர் நான்சி பெலோசிக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதுமட்டுமின்றி அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தைவான் விவகாரம் தொடர்பாக ஜி ஜின்பிங்கிடம் 5வது முறையாக தொலைபேசியில் பேசியுள்ளார்.
அப்போது ஆத்திரமடைந்த சீன அதிபர் , நெருப்பில் விளையாடுபவர்கள் நிச்சயம் எரிந்து போவார்கள் என்றும், இதனை அமெரிக்கா புரிந்து கொள்ளும் என தான் நம்புவதாகவும் எச்சரித்துள்ளார். மேலும், தைவான் விவகாரத்தில் சீனாவின் இறையாண்மை மற்றும் ஒற்றுமையை பாதுகாப்பது, சீன மக்களின் விருப்பம். "ஒரே சீனா" எனும் கொள்கைக்கு அமெரிக்கா கட்டுப்பட வேண்டும் என்றும் சீன அதிபர் கூறியுள்ளார். மேலும் இந்த தொலைபேசி உரையாடலில் இரு நாட்டு தலைவர்களும் நேரில் சந்தித்து தைவான் விவகாரம் குறித்து பேசவி௫ப்பதாக மூத்த அமெரிக்க அதிகாரி ௯றியுள்ளாா்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu