நிலவில் ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்ள, ஆர்டெமிஸ் என்ற திட்டத்தில் நாசா பணியாற்றி வருகிறது. இந்த திட்டத்தின் பகுதியாக, விண்கலங்கள் மற்றும் மனிதர்கள் நிலவுக்கு அனுப்பப்பட உள்ளனர். அந்த வகையில், தற்போது, ஆஸ்திரேலியா, ஆர்டெமிஸ் திட்டத்தின் பகுதியாக, நிலவுக்கு ரோவரை அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நிலவில் வெற்றிகரமாக ரோவரை தரை இறக்கிய நாடுகளின் பட்டியலில் புதிதாக ஆஸ்திரேலியாவும் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 2026 ஆம் ஆண்டு, ஆர்டெமிஸ் திட்டத்தின் பகுதியாக ஆஸ்திரேலியாவின் ரோவர் அனுப்பப்பட உள்ளது. அதற்கு முன்னதாக, நாளை ஜப்பானின் நிலவு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அது வெற்றி பெறும் பட்சத்தில், ஜப்பானும் நிலவில் ரோவரை தரையிறக்கிய நாடாக பட்டியலில் இடம் பெறும். ஆஸ்திரேலியாவின் ரோவர், நிலவில் இருந்து மாதிரிகளை சேகரித்து கொடுக்கும் எனவும், அதிலிருந்து ஆக்சிஜனை பிரித்தெடுக்கும் ஆராய்ச்சியில் நாசா ஈடுபடும் எனவும் கூறப்பட்டுள்ளது.