நாட்டிற்கு எதிரான போலி செய்திகளை வெளியிட்டதாக 8 யூடியூப் சேனல்களை முடக்கியது மத்திய அரசு.

August 18, 2022

நாட்டிற்கு எதிரான போலி செய்திகளை வெளியிட்டதாக 8 யூடியூப் சேனல்களைமத்திய அரசு முடக்கியிருக்கிறது. போலி செய்திகளை வெளியிடுவதாக எழுந்த புகாரின் பேரில் மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் கண்காணிப்பில் ஈடுபட்டது. இதன் அடிப்படையில் பாகிஸ்தானை சேர்ந்த ஒரு சேனல் உட்பட மொத்தம் 8 யூடியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கியிருக்கிறது. தேசிய பாதுகாப்பு, வெளிநாட்டு உறவு, பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வேறு சேனல்களில் தடை செய்யப்பட்ட […]

நாட்டிற்கு எதிரான போலி செய்திகளை வெளியிட்டதாக 8 யூடியூப் சேனல்களைமத்திய அரசு முடக்கியிருக்கிறது.

போலி செய்திகளை வெளியிடுவதாக எழுந்த புகாரின் பேரில் மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் கண்காணிப்பில் ஈடுபட்டது. இதன் அடிப்படையில் பாகிஸ்தானை சேர்ந்த ஒரு சேனல் உட்பட மொத்தம் 8 யூடியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கியிருக்கிறது. தேசிய பாதுகாப்பு, வெளிநாட்டு உறவு, பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே வேறு சேனல்களில் தடை செய்யப்பட்ட மத ரீதியிலான யூ-டியூப் வீடியோக்கள், தடை செய்யப்பட்ட நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. முடக்கப்பட்ட சேனல்களில் உள்ள தேசவிரோத செய்திகள் ஆய்வு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. முடக்கப்பட்ட யூ-டியூப் சேனல்களுக்கு 114 கோடி பார்வைகளும், 85 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu