நேட்டோவில் உறுப்பினராவதற்கு பின்லாந்து மற்றும் ஸ்வீடனுக்கு அமெரிக்க சபை ஒப்புதல் 

August 4, 2022

உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பைத் தொடர்ந்து பின்லாந்தும், சுவீடனும் நேட்டோ அமைப்பில் இணைய முடிவு செய்தன. ஆனால், நேட்டோ அமைப்பில் இணையவேண்டுமானால், வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் கீழ் உறுப்பு நாடுகளாக இருக்கும் 30 நாடுகளின் நாடாளுமன்றங்கள் வாக்களிக்க வேண்டும். அதாவது நேட்டோ அமைப்பிலுள்ள ஒரு நாடு தாக்கப்பட்டால், 'அத்தாக்குதல், அனைத்து நாடுகளின் மீதான தாக்குதலுக்கு சமம்' என்ற கொள்கையின்படி, நேட்டோ அமைப்பில் உறுப்பினராக இருக்கும் நாடுகளுக்கு இந்த பாதுகாப்பு கொடுக்கப்படும். அதன்படி இரண்டு நாடுகளின் இணைப்புக்கு […]

உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பைத் தொடர்ந்து பின்லாந்தும், சுவீடனும் நேட்டோ அமைப்பில் இணைய முடிவு செய்தன. ஆனால், நேட்டோ அமைப்பில் இணையவேண்டுமானால், வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் கீழ் உறுப்பு நாடுகளாக இருக்கும் 30 நாடுகளின் நாடாளுமன்றங்கள் வாக்களிக்க வேண்டும். அதாவது நேட்டோ அமைப்பிலுள்ள ஒரு நாடு தாக்கப்பட்டால், 'அத்தாக்குதல், அனைத்து நாடுகளின் மீதான தாக்குதலுக்கு சமம்' என்ற கொள்கையின்படி, நேட்டோ அமைப்பில் உறுப்பினராக இருக்கும் நாடுகளுக்கு இந்த பாதுகாப்பு கொடுக்கப்படும். அதன்படி இரண்டு நாடுகளின் இணைப்புக்கு ஆதரவாக அமெரிக்க சபையில் 95 க்கு 1 என்ற கணக்கில் வாக்களிக்கப்பட்டது.மேலும இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ஒப்புதல் அளித்திருந்தது.  இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் தனது டுவிட்டரில், "பின்லாந்து மற்றும் சுவீடன் ஆகிய நாடுகள் நேட்டோவில் இணைவதன் மூலம், அந்நாடுகளுக்கு பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படும். மேலும் இது முழு அட்லாண்டிக் கூட்டணிக்கும் பயனளிக்கும் வகையில் இ௫க்கும் என்று ௯றினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu