படையெடுப்புக்குத் தயாராக இராணுவப் பயிற்சிகளை சாக்காகப் பயன்படுத்துகிறது சீனா: தைவான்

August 9, 2022

  அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், சீனா இராணுவப் பயிற்சிகளை தைவான் மீது படையெடுப்பதற்குத் தயாராகும் ஒரு சாக்காகப் பயன்படுத்துவதாகத் தைவானின் வெளியுறவு அமைச்சர் தெரிவித்தார். இது குறித்து தைவான் வெளியுறவு துறை அமைச்சர் ஜோசப் வூ தைபேயில் செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில், தைவான் ஜலசந்தியில் அதிகாரப்பூர்வமற்ற இடைநிலைக் கோட்டை சீனா அடிக்கடி மீறுவதாலும் பயிற்சிகள் செய்வதாலும் பயப்படமாட்டோம். இந்த விவகாரத்தில் தைவான் நாட்டின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை பாதுகாக்க […]

 

அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், சீனா இராணுவப் பயிற்சிகளை தைவான் மீது படையெடுப்பதற்குத் தயாராகும் ஒரு சாக்காகப் பயன்படுத்துவதாகத் தைவானின் வெளியுறவு அமைச்சர் தெரிவித்தார்.

இது குறித்து தைவான் வெளியுறவு துறை அமைச்சர் ஜோசப் வூ தைபேயில் செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில், தைவான் ஜலசந்தியில் அதிகாரப்பூர்வமற்ற இடைநிலைக் கோட்டை சீனா அடிக்கடி மீறுவதாலும் பயிற்சிகள் செய்வதாலும் பயப்படமாட்டோம். இந்த விவகாரத்தில் தைவான் நாட்டின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை பாதுகாக்க சர்வதேச ஆதரவை வேண்டுகிறோம்.

இது தைவானில் பொதுமக்களின் மன உறுதியை பலவீனப்படுத்தும் முயற்சியில் நடத்தப்படும் செயலாகும். பெரிய அளவிலான இராணுவப் பயிற்சிகள், ஏவுகணை ஏவுதல்கள் மற்றும் இணையத் தாக்குதல்கள், தவறான தகவல் பிரச்சாரம் மற்றும் பொருளாதார வற்புறுத்தல் ஆகியவற்றை சீனா மேற்கொள்கிறது.

பாலிஸ்டிக் ஏவுகணை ஏவுதல்கள் மற்றும் தைவானைச் சுற்றி கடல் மற்றும் வான்வழி தாக்குதல்களை உருவகப்படுத்திய பயிற்சிகள் போன்றவற்றை சீனா மேற்கொண்டது. தொடர்ந்து நான்கு நாட்கள் நடைபெற்ற சீனப் பயிற்சிகள் ஞாயிற்றுக்கிழமை முடிவிற்கு வந்தபோது அங்கே பதட்டம் நிலவியது.

தவிர திங்களன்று நீர்மூழ்கிக் கப்பல் உதவியோடு கடல் தாக்குதல் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தும் புதிய கூட்டுப் பயிற்சிகளை நடத்தப்போவதாக சீனா அறிவித்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக
தைவான் தனது நீண்ட திட்டமிடப்பட்ட பயிற்சிகளை செவ்வாயன்று தொடங்கியது. அதாவது, தெற்கு மாவட்டமான பிங்டங்கில் இருந்து கடலில் ஹோவிட்சர் பீரங்கிகளை சுட்டது.

இந்த சம்பவம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் கூறுகையில், சீனாவின் நடவடிக்கைகள் குறித்து கவலையடைவதாகவும் ஆனால் தைவானைப் பற்றி தாம் கவலைப்படவில்லை என்றும் கூறினார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின், சீனா 'எங்கள் கடல் பகுதியில் திறந்த, வெளிப்படையான மற்றும் தொழில்முறை இராணுவப் பயிற்சிகளை நடத்தி வருகிறது. தைவான் சீனாவின் ஒரு பகுதியாகும்' என்று கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu