உலகின் மிகப்பெரிய சில்லறை வர்த்தக நிறுவனமான வால்மார்ட், அமெரிக்காவில் கிட்டத்தட்ட 1.6 மில்லியன் தொழிலாளர்களை கொண்டுள்ளது. சமீபத்தில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி உலகம் முழுவதும் உள்ள நிறுவனங்களை பாதித்துள்ளதால், வால்மார்ட் நிறுவனம் சுமார் 200 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இது குறித்து அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தனது அறிக்கையில் ௯றியதாவது " நிறுவனத்தின் கட்டமைப்பைப் புதுப்பித்து, தெளிவான மற்றும் வலுவான எதிர்காலத்தை அமைத்து நிறுவனத்தை சிறப்பாக நிலைநிறுத்துவதற்கு சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாக ௯றினார்.
அதே நேரத்தில், நிறுவனம் "இ-காமர்ஸ், தொழில்நுட்பம், உடல்நலம் மற்றும் ஆரோக்கியம், விநியோகச் சங்கிலி மற்றும் விளம்பர விற்பனை போன்ற முக்கிய துறைகளில் முதலீடு செய்துள்ளது. எனவே அதன் சேவைகளை ஆதரிக்க சில உத்திகளை கையாள்வதாகவும் அந்த அறிக்கையில் தெரிவித்தார். இதேபோல் அமேசான் அதன் பூர்த்தி மையங்கள் மற்றும் விநியோக நெட்வொர்க்கில் இ௫ந்து தனது நேரடி பணியாளர்களை கிட்டத்தட்ட 1 லட்சமாகக் குறைத்துள்ளது என்று அதன் தலைமை நிதி அதிகாரி பிரையன் ஓல்சாவ்ஸ்கி ௯றியுள்ளாா்.
உலகளாவிய பொருளாதார வீழ்ச்சியானது, மற்ற சில்லறை நிறுவனங்களான டார்கெட் மற்றும் பெஸ்ட் பை போன்றவற்றையும் தாக்கியுள்ளது.