பருப்புக்கான இறக்குமதி வரி ரத்து நீட்டிப்பு

December 23, 2023

பருப்பு வகைகளுக்கான இறக்குமதி வரி சலுகைக்கான காலவரம்பு நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மத்திய அரசு பருப்பு வகைகளுக்கான இறக்குமதி வரியை ரத்து செய்திருந்தது. அதேபோன்று 2022 பிப்ரவரி முதல் வேளாண் உள் கட்டமைப்பு செஸ்வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இந்த சலுகைகளுக்கான கால வரம்பு கடைசியாக அடுத்த ஆண்டு 2024 வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. தற்போது இறக்குமதி வரி ரத்து மற்றும் வேளாண் உட்கட்டமைப்பு செஸ் வரிவிலக்கு ஆகியவற்றிற்காக கால அவகாசம் 2025 ஆம் […]

பருப்பு வகைகளுக்கான இறக்குமதி வரி சலுகைக்கான காலவரம்பு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மத்திய அரசு பருப்பு வகைகளுக்கான இறக்குமதி வரியை ரத்து செய்திருந்தது. அதேபோன்று 2022 பிப்ரவரி முதல் வேளாண் உள் கட்டமைப்பு செஸ்வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இந்த சலுகைகளுக்கான கால வரம்பு கடைசியாக அடுத்த ஆண்டு 2024 வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. தற்போது இறக்குமதி வரி ரத்து மற்றும் வேளாண் உட்கட்டமைப்பு செஸ் வரிவிலக்கு ஆகியவற்றிற்காக கால அவகாசம் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மேலும் இது நாட்டில் சீரான விநியோகம் மற்றும் விலையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக இந்த சலுகை நீட்டிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் சமையல் எண்ணெய்க்கு வழங்கப்பட்டிருக்கும் தற்போதைய இறக்குமதி வரி கட்டமைப்பை அரசு நீட்டிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu