பாஜக மாவட்ட அலுவலகங்களை திறந்து வைக்க, வரும் 29ம் தேதி தமிழகம் வருகிறார் அமித்ஷா

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலின் முன்னோட்டமாக 5 மாநில தேர்தல் நடைபெற்றது. பஞ்சாப் மாநிலத்தை தவிர்த்து மற்ற 4 மாநிலங்களில் பாஜக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. நாட்டில் உள்ள 31 மாநிலங்களில் 18 மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைத்துள்ளது. இரண்டு மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளது. எனவே நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலை நடத்த பாஜக தீவிரம் காட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 29ம் […]

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலின் முன்னோட்டமாக 5 மாநில தேர்தல் நடைபெற்றது. பஞ்சாப் மாநிலத்தை தவிர்த்து மற்ற 4 மாநிலங்களில் பாஜக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. நாட்டில் உள்ள 31 மாநிலங்களில் 18 மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைத்துள்ளது. இரண்டு மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளது. எனவே நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலை நடத்த பாஜக தீவிரம் காட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 29ம் தேதி ஒரு நாள் பயணமாக தமிழகம் வருகிறார். தமிழகத்தில் பாஜகவின் சார்பில் திருச்சி, விழுப்புரம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் புதிதாக பாஜக மாவட்ட அலுவலகங்கள் கட்டப்பட்டு உள்ளன. இதனை திறந்து வைக்க  அமித்ஷா  கோவை வருகிறார். அங்கிருந்தபடியே காணொலி காட்சி மூலமாக பாஜக மாவட்ட அலுவலகங்களை திறந்து வைக்கிறார். அமித்ஷாவின் வருகையின் போது பாஜக மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகளுடன் நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை செய்ய உள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu