புதிய பிரம௫க்கான வாக்கெடுப்பில் ரிஷி சுனக்கை விட லிஸ் ட்ரஸ் முன்னிலை

August 5, 2022

போரிஸ் ஜான்சனின் அமைச்சரவையில் இருந்து சஜித் ஜாவிட் முதலில் வெளியேறினார் . அதைத் தொடர்ந்து ரிஷி சுனக் மற்றும் பல அமைச்சர்கள் வெளியேறினர் . இதன்விளைவாக ஜான்சன் தனது ராஜினாமாவை அறிவித்தார். எனவே புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் டோரி உறுப்பினர்களின் கணக்கெடுப்பு 10 டவுனிங் ஸ்ட்ரீட்டில் நடைபெற்றது. இதன் முடிவுகளை கன்சர்வேடிவ் ஹோம் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதன்படி இந்த கணக்கெடுப்பில் 58 சதவீதம் பேர் டிரஸ்ஸுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இதனால் பிரதமர் போட்டியாளரான ரிஷி சுனக்கை விட […]

போரிஸ் ஜான்சனின் அமைச்சரவையில் இருந்து சஜித் ஜாவிட் முதலில் வெளியேறினார் . அதைத் தொடர்ந்து ரிஷி சுனக் மற்றும் பல அமைச்சர்கள் வெளியேறினர் . இதன்விளைவாக ஜான்சன் தனது ராஜினாமாவை அறிவித்தார். எனவே புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் டோரி உறுப்பினர்களின் கணக்கெடுப்பு 10 டவுனிங் ஸ்ட்ரீட்டில் நடைபெற்றது. இதன் முடிவுகளை கன்சர்வேடிவ் ஹோம் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதன்படி இந்த கணக்கெடுப்பில் 58 சதவீதம் பேர் டிரஸ்ஸுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இதனால் பிரதமர் போட்டியாளரான ரிஷி சுனக்கை விட வெளியுறவு அமைச்சர் லிஸ் ட்ரஸ் முன்னிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியது. அதாவது 12 சதவீதம் பேர் முடிவு செய்யாத நிலையில் 26 சதவீதம் பேர் மட்டுமே சுனக்கிற்கு ஆதரவாக உள்ளனர். இதற்கு முன் எடுக்கப்பட்ட YouGov க௫த்துகணிப்பிலும் லிஸ் டிரஸ்க்கு மக்களின் ஆதரவு அதிகமாக இ௫ப்பது உறுதியானது. அதுமட்டுமின்றி மற்றொ௫ முன்னாள் வேட்பாளரும் மூத்த டோரியுமான சஜித் ஜாவிட் ஒ௫ போட்டியில் லிஸ் டிரஸ்ஸை ஆதரித்துள்ளார். அவரைத் தொடர்ந்து அதிபர் நாதிம் ஜஹாவி, வர்த்தக மந்திரி பென்னி மோர்டான்ட் மற்றும் டோரி பின்வரிசை உறுப்பினர் டாம் துகென்தாட் உட்பட பெரும்பாலான முன்னாள் வேட்பாளர்களின் ஆதரவை லிஸ்ட்ரஸ் பெற்றுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu