புதிய ராயல் என்ஃபீல்ட் ஹண்டர் 350 சிசி பைக் அறிமுகம்

August 10, 2022

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ராயல் என்ஃபீல்ட் ஹண்டர் என்ற 350 சிசி பைக்கை அறிமுகம் செய்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக ராயல் என்ஃபீல்ட் ஹண்டர் பைக்கின் வடிவமைப்பு உருவாக்கத்தில் இருந்தது. தற்போது இந்த மாடல் பைக் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் எடை சுமார் 181 கிலோ ஆகும். இந்த பைக்கின் வீல் ஸ்பேஸ் குறைவு என்பதால் விபத்துகளைத் தவிர்க்க இயலும். சுமார் 800 மில்லி மீட்டர் சீட்டு உயரம் கொண்ட இந்த பைக்கில், ஸ்போக் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. […]

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ராயல் என்ஃபீல்ட் ஹண்டர் என்ற 350 சிசி பைக்கை அறிமுகம் செய்துள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளாக ராயல் என்ஃபீல்ட் ஹண்டர் பைக்கின் வடிவமைப்பு உருவாக்கத்தில் இருந்தது. தற்போது இந்த மாடல் பைக் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் எடை சுமார் 181 கிலோ ஆகும். இந்த பைக்கின் வீல் ஸ்பேஸ் குறைவு என்பதால் விபத்துகளைத் தவிர்க்க இயலும். சுமார் 800 மில்லி மீட்டர் சீட்டு உயரம் கொண்ட இந்த பைக்கில், ஸ்போக் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. எண்பதுகளில் இருந்த புல்லட் மாடல்களைப் போன்றே இந்த ராயல் என்ஃபீல்ட் ஹண்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், புல்லட் கிளாசிக் மற்றும் மீட்டியார் மாடலில் உள்ள அதே இஞ்சினில் சில மாற்றங்கள் செய்து இந்த பைக் வெளிவந்துள்ளது. மேலும், யூஎஸ்பி சார்ஜிங் போர்டுகள், பெரிய டிஜிட்டல் டிஸ்ப்ளே, ஹசார்டு லைட் போன்ற புதிய அம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. அத்துடன் ரெட்ரோ மற்றும் மெட்ரோ என்ற இரண்டு வகைகளில் இந்த பைக் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியச் சந்தையில் இதன் மதிப்பு 1.5 லட்சம் முதல் 1.69 லட்சம் வரை இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தில் இருந்து இதுவரை வெளியான பைக்குகளில் இதுவே எடை குறைவான மற்றும் விலை குறைவான பைக் என்று கருதப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu