புதுச்சேரியில் விமான சேவை விரிவாக்கம்

August 9, 2022

புதுச்சேரியில் இருந்து திருப்பதி மற்றும் கொச்சி நகரங்களுக்கு விமான சேவை அக்டோபர் மாதம் துவக்கப்பட உள்ளது. புதுச்சேரி, லாஸ்பேட்டை விமான நிலையத்தில் இருந்து, 2013ம் ஆண்டு, 'ஸ்பைஸ் ஜெட்' நிறுவனமும், 2015ம் ஆண்டு 'ஏர் இந்தியா' நிறுவனமும் பெங்களூருக்கு விமான சேவையை துவங்கின. ஆனால், பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லாததால் விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. இதையடுத்து, நாடு முழுவதும் விமான சேவையை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசு புதிய விமான கொள்கையான 'உதான்' திட்டத்தை அறிவித்தது.  இந்த […]

புதுச்சேரியில் இருந்து திருப்பதி மற்றும் கொச்சி நகரங்களுக்கு விமான சேவை அக்டோபர் மாதம் துவக்கப்பட உள்ளது.

புதுச்சேரி, லாஸ்பேட்டை விமான நிலையத்தில் இருந்து, 2013ம் ஆண்டு, 'ஸ்பைஸ் ஜெட்' நிறுவனமும், 2015ம் ஆண்டு 'ஏர் இந்தியா' நிறுவனமும் பெங்களூருக்கு விமான சேவையை துவங்கின. ஆனால், பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லாததால் விமான சேவைகள் நிறுத்தப்பட்டன.
இதையடுத்து, நாடு முழுவதும் விமான சேவையை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசு புதிய விமான கொள்கையான 'உதான்' திட்டத்தை அறிவித்தது.  இந்த திட்டத்தின் மூலம், சிறிய நகரங்களை வான் வழியாக இணைக்க திட்டமிடப்பட்டது.

இதனால், தடைபட்டிருந்த விமான சேவையை மீண்டும் துவக்க புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுத்தது. அரசின் முயற்சியால், 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 'ஸ்பைஸ் ஜெட்' நிறுவனம் ஐதராபாத்திற்கு விமான சேவையை தொடங்கியது. இதற்கு பயணிகளிடம் வரவேற்பு கிடைத்ததால், பெங்களூரு நகருக்கும் சேவையை துவக்கியது.

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த மார்ச் 27ம் தேதி முதல் புதுச்சேரியில் மீண்டும் விமான சேவை துவங்கியது. 'ஸ்பைஸ் ஜெட்' நிறுவனத்துடன் மீண்டும் ஒப்பந்தம் புதுப்பித்து, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் நகரங்களுக்கு விமானம் இயக்கப்பட்டு வருகிறது.
தற்போது, புதுச்சேரியில் இருந்து பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு 'ஸ்பைஸ் ஜெட்' விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இது தவிர, திருப்பதி மற்றும் கொச்சி ஆகிய நகரங்களுக்கும் புதுச்சேரியில் இருந்து விமான சேவை துவக்கப்பட உள்ளது. இந்த விமான சேவைகள், வரும் அக்டோபர் 30ம் தேதி முதல் துவக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த இரண்டு நகரங்களுக்கும் விமானங்களை இயக்க 'ஸ்பைஸ் ஜெட்' நிறுவனம் முன் வந்துள்ளது. புதுச்சேரியில் இருந்து திருப்பதி மற்றும் கொச்சியில் இருந்து அதிக அளவில் புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். விமான சேவை விரிவாக்கம் செய்யப்படுவதன் மூலம் மாநிலத்தில் சுற்றுலா வளர்ச்சி அடுத்த கட்டத்திற்கு நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu