பெட்ரோலுடன் எத்தனால் கலப்பதால் கிடைத்த 50,000 கோடி ரூபாய் விவசாயிகளுக்கே சென்றது: பிரதமர் மோடி

August 13, 2022

பெட்ரோலுடன் எத்தனாலை கலப்பதன் மூலம் கிடைத்த 50,000 கோடி வருவாயை விசையிகளுக்கு அளித்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கடந்த 7 முதல் 8 ஆண்டுகளில் பெட்ரோலுடன் எத்தனாலை கலப்பதன் மூலம் அந்நிய செலாவணியில் இருந்து சுமார் 50,000 கோடி சேமித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அரியானா மாநிலம் பானிப்பட்டில், 900 கோடி ரூபாய் மதிப்பில் 2 ஆம் தலைமுறை எத்தனால் ஆலையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், […]

பெட்ரோலுடன் எத்தனாலை கலப்பதன் மூலம் கிடைத்த 50,000 கோடி வருவாயை விசையிகளுக்கு அளித்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கடந்த 7 முதல் 8 ஆண்டுகளில் பெட்ரோலுடன் எத்தனாலை கலப்பதன் மூலம் அந்நிய செலாவணியில் இருந்து சுமார் 50,000 கோடி சேமித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அரியானா மாநிலம் பானிப்பட்டில், 900 கோடி ரூபாய் மதிப்பில் 2 ஆம் தலைமுறை எத்தனால் ஆலையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், ‘இந்திய ஆயில் கார்ப்பரேஷனின் இரண்டாம் தலைமுறை எத்தனால் ஆலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறேன். கடந்த 7 முதல் 8 ஆண்டுகளில் பெட்ரோலுடன் எத்தனாலை கலப்பதன் மூலம் அந்நிய செலாவணியில் இருந்து சுமார் 50,000 கோடி சேமிக்கப்பட்டுள்ளது. இந்த 50,000 தொகை விவசாயிகளுக்கு சென்றுள்ளது என்று கூறினார்..
மேலும், 8 ஆண்டுகளில் எத்தனாலின் உற்பத்தி 40 கோடி லிட்டரில் இருந்து 400 கோடி லிட்டராக உயர்ந்துள்ளது. இந்த எத்தனால் ஆலை விவசாயிகளுக்கு வருமானத்தை அதிகரிக்கும். பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தை குறைக்கும். ஹரியானா மற்றும் டெல்லியில் மாசுபாட்டை குறைக்கும் என்றும் அவர் கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu