பெண்களுக்கான மாநிலக் கொள்கை விரைவில் வெளியீடு: அமைச்சர் கீதா ஜீவன் தகவல்

பெண்களுக்கான மாநில கொள்கையை சமூக நலத்துறை விரைவில் வெளியிட உள்ளதாக  அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில், 75-ம் ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி ‘பெண்களின் பங்கேற்பு, பிரதிநிதித்துவம் மற்றும் அதிகாரமளித்தல்' என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கில், சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் , தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி, தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ரத்னகுமார் […]

பெண்களுக்கான மாநில கொள்கையை சமூக நலத்துறை விரைவில் வெளியிட உள்ளதாக  அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில், 75-ம் ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி ‘பெண்களின் பங்கேற்பு, பிரதிநிதித்துவம் மற்றும் அதிகாரமளித்தல்' என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது.

இந்த கருத்தரங்கில், சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் , தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி, தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ரத்னகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பேசுகையில், தமிழகத்தில் சங்க காலம் முதல் தற்போது வரை பெண்கள் ஆளுமை பொறுப்பு வகித்து வருகின்றனர். பெண்களுக்கான மாநில கொள்கையை சமூக நலத்துறை விரைவில் வெளியிட உள்ளது. மேலும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் உட்பட பெண்களின் முன்னேற்றத்துக்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டத்தை தீவிரமாக செயல்படுத்த வேண்டும். பெண்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு, பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் குறைபாடுகள் உள்ளன. அதனை சரி செய்ய அரசு முயற்சிகள் மேற்கொள்ளும். மேலும் சமூக மாற்றத்தோடு இணைந்துதான் பெண்களின் முன்னேற்றத்தைக் கொண்டுவர முடியும். மாற்றம் ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் தொடங்க வேண்டும் என்று அவர் கூறினார்.

 

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu