போக்குவரத்து கழக ஊழியர்களின் ஊதிய உயர்வு குறித்த 7ஆம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது.
போக்குவரத்துத்துறை அமைச்சர் தலைமையில் ஊழியர்களுக்கான 7ம் கட்ட பேச்சுவார்த்தை, சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பயிற்சி மைய வளாகத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த பேச்சுவார்த்தையில் அங்கீகரிக்கப்பட்ட 66 தொழிற்சங்கத்தை சேர்ந்த தலா 1 பிரதிநிதி பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.
14வது ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை அமல்படுத்த கோரி போக்குவரத்து கழக ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நிதி நெருக்கடி உள்ளிட்ட பிரச்சனைகளால் ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை அமல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 3ம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்கப்பட்டிருப்பதாக போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில் அனைத்து கோரிக்கைகளும் ஏற்கப்படும் என்று தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.














