மதுரையிலிருந்து ஷீரடிக்கு தனியார் பங்களிப்புடன் ஆன்மிக சுற்றுலா ரயில்

August 2, 2022

இந்திய ரயில்வே துறை பாரத் கவுரவ் திட்டத்தின் மூலம் தனியாருடன் சுற்றுலா ரயில்களை இயக்கி வருகிறது. கடந்த ஜூலை 23 அன்று மதுரையிலிருந்து காசிக்கு ஆன்மிகச் சுற்றுலா ரயிலை இயக்கியது. இந்நிலையில், ஆகஸ்ட் 21 அன்று காலை 7.45 மணிக்கு ஆன்மிகச் சுற்றுலா ரயில் மதுரையிலிருந்து ஷீரடிக்கு புறப்படுகிறது. திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், சென்னை எழும்பூர் வழியாக ஹைதராபாத் செல்கிறது. அங்கு பயணிகள் சலர்ஜங் அருங்காட்சியகம், சார்மினார், ராமாநுஜர் சமத்துவ சிலை, கோல்கொண்டா கோட்டை ஆகிய இடங்களைப் […]

இந்திய ரயில்வே துறை பாரத் கவுரவ் திட்டத்தின் மூலம் தனியாருடன் சுற்றுலா ரயில்களை இயக்கி வருகிறது. கடந்த ஜூலை 23 அன்று மதுரையிலிருந்து காசிக்கு ஆன்மிகச் சுற்றுலா ரயிலை இயக்கியது.

இந்நிலையில், ஆகஸ்ட் 21 அன்று காலை 7.45 மணிக்கு ஆன்மிகச் சுற்றுலா ரயில் மதுரையிலிருந்து ஷீரடிக்கு புறப்படுகிறது. திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், சென்னை எழும்பூர் வழியாக ஹைதராபாத் செல்கிறது. அங்கு பயணிகள் சலர்ஜங் அருங்காட்சியகம், சார்மினார், ராமாநுஜர் சமத்துவ சிலை, கோல்கொண்டா கோட்டை ஆகிய இடங்களைப் பார்வையிடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து ஆகஸ்ட் 24 அன்று ஷீர்டி சாய்பாபா தரிசனம் செய்யும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மறுநாள் சனிசிங்னாபூர், நாசிக், திரியம்பகேஷ்வர், பஞ்சவடி தரிசனம். ஆகஸ்ட் 27-ல் பண்டரிபுரம் பாண்டுரங்கர் தரிசனம், ஆகஸ்ட் 28- அன்று மந்திராலயம் ஸ்ரீ ராகவேந்திரர் தரிசனம் செய்யலாம். இந்த ஆன்மிகச் சுற்றுலா ஆகஸ்ட் 29 அன்று நிறைவடைகிறது. 29-ம் தேதி மதியம் 1.30 மணிக்கு ரயில் மதுரையை வந்தடைகிறது.
இந்த உலா ரயிலில் 3 ஏ.சி பெட்டிகளுடன், படுக்கும் வசதி கொண்ட கோச்கள் இணைக்கப்பட்டுள்ளன. சுவையான தென்னிந்திய சைவ உணவு வழங்கும் 2 பேன்டரி பெட்டிகள் உள்ளன.

இதில் கம்போர்ட், ஸ்டாண்டர்ட், பட்ஜெட் என 30,000, ரூ 24,000, ரூ 16,900 என 3 வகையான கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இருவர் அதற்கு மேற்பட்ட குடும்பமாகச் செல்லும்போது, சலுகை அடிப்படையில் குறிப்பிட்ட அளவு கட்டணம் குறைக்கப்படுகிறது.
இந்தச் சுற்றுலாவிற்கு www.ularail.com என்ற இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்யலாம் அல்லது 73058 58585 என்ற அலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளலாம் என பயண ஏற்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu