மாற்றக்கூடிய வசதியுடன் கூடிய மின்சார வாகன பேட்டரிகளை ரிலையன்ஸ் வெளியிட்டுள்ளது. இது புத்தாக்க எரிசக்தி துறையில் மிக முக்கிய மாற்றத்தை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனியாக பிரித்து எடுக்கக் கூடிய வகையிலும், மாற்றி அமைத்து வைக்கக்கூடிய வகையிலும், மின்சார வாகன பேட்டரிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவற்றை, மின்சார வாகனங்கள் அல்லாத வேறு சில பயன்பாட்டிற்கும் உபயோகப்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எரிசக்தி தொடர்பாக நடைபெற்ற கண்காட்சி ஒன்றில், ரிலையன்ஸ் இந்த சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த பேட்டரிகளை சார்ஜிங் நிலையங்கள் மட்டும் இன்றி, ரிலையன்ஸ் நிறுவனத்தின் பேட்டரிகளை மாற்றும் மையத்திலும், வீடுகளில் உள்ள சூரிய எரிசக்தி மூலமாகவும் சார்ஜ் செய்ய முடியும் என கூறப்பட்டுள்ளது.