பாஸ்மதி அரிசி, பருப்பு மற்றும் உப்பு போன்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் மிஷ்டான் ஃபுட்ஸ் நிறுவனம், எகனாமிக் டைம்ஸ் நிறுவனத்தின் 2022-ம் ஆண்டுக்கான 'வணிக மாற்றத்திற்கான சின்னங்கள்' விருதை வென்றுள்ளது.
மிஷ்டான் ஃபுட்ஸ் நிறுவனம், உணவு தானிய ஏற்றுமதி இறக்குமதியில் பல மைக்கல்களைக் கடந்துள்ளது. இந்த நிறுவனம், தனது காலாண்டு நிதிநிலை அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. அதன்படி, நிறுவனத்தின் நிகர லாபம் 216.05% உயர்ந்து 11.03 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் மொத்த விற்பனை 118.73% உயர்ந்து, 158.27 கோடியாக உள்ளது. குறிப்பாக உப்பு விற்பனையில் இந்த நிறுவனம் நல்ல வளர்ச்சி கண்டுள்ளது. இந்தியாவின் பல சில்லறை வணிகர்கள் இந்த நிறுவனத்தின் உப்பை வாங்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். அத்துடன், சமீபத்தில் 1:1 என்ற விகிதத்தில் பங்குகளுக்கான வெகுமதியை இந்நிறுவனம் அறிவித்திருந்தது. இவை மட்டுமல்லாது, உணவு தானியத்திலிருந்து எத்தனால் தயாரிக்கும் இந்தியாவின் மாபெரும் மையத்தை அமைக்க, குஜராத் மாநில அரசோடு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. சுமார் 1000 KPLD ப்ராஜெக்ட்டான இதன் மதிப்பு, 2250 கோடியாக இருக்கும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம், 5000 க்கும் மேற்பட்டோருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் இந்த நிறுவனம் செயல்பட உள்ளது. மேலும், இந்த திட்டத்தின் வருடாந்திர வருவாய் 3350 கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டம் 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் செயல்படுத் துவங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இவ்வாறு, தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் முன்னேறி வரும் இந்த நிறுவனம், தற்போது எகனாமிக் டைம்ஸ் நிறுவனத்தின் 2022-ம் ஆண்டுக்கான 'வணிக மாற்றத்திற்கான சின்னங்கள்' விருதை வென்றுள்ளது.














